‘அண்ணாத்த’ படத்தின் ‘சாரல் சாரல் காற்றே..’ டூயட் பாடல் வெளியீடு

 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தின் 2வது பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இதன் முதல் சிங்கிளான ‘அண்ணாத்த அண்ணாத்த’ என்ற பாடல் கடந்த 4-ந் தேதி வெளியானது. டி.இமான் இசையில் பாடலாசிரியர்  விவேகா எழுதியுள்ள இந்த பாடலை மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். எனவே இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது ‘சாரல் சாரல் காற்றே’ என்ற டூயட் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இமான் இசையில் உருவான இப்பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல்  பாடியுள்ளனர்.