நாளை ட்ரெய்லர் வெளியீடு… மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்?
பேட்ச் ஒர்க் என்று சொல்லப்படும் விடுபட்ட சில காட்சிகள் அல்லது மேட்சிங் காட்சிகளுக்கான படப்படிப்பு என்று கூறப்பட்டாலும், புதிதாக ஒரு பாடலுக்கான முழுமையான படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
படத்தின் இரண்டாம் பாதியில் சற்று விறுவிறுப்பை கூட்டுவதற்காக இந்தப் பாடல் காட்சி என்றும் சம்மந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தலைவர் 168 படத்தின் பூஜை நடைபெற்ற நாளே அடையாளமாக ஒரு காட்சி படமாக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் தர்பார் படப்பிடிப்பில் தான் ரஜினிகாந்த் பங்கேற்பதாகவும் கோடம்பாக்கத்திலிருந்து தகவல்கள் வந்துள்ளது.
இந்நிலையில் நாளை டிசம்பர் 16ம் தேதி தர்பார் ட்ரெய்லர் வெளியாகும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். மற்றொரு பக்கம் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. 2020 பொங்கல் வெளியீடாக தர்பார் வருகிறது.
– வணக்கம் இந்தியா