கொரோனாவுக்காக அக்‌ஷய் குமார் 25 கோடிரூபாய்!.. ரஜினி, பவன்கல்யாண், மோகன்லால் ?

பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் கொரோனா நிவாரண நிதிக்காக பிரதமரின் சிறப்பு நிதிக்கு 25 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இதை ட்விட்டர் மூலம் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளார் அக்ஷய் குமார். கனடா நாட்டின் குடிமகனாக இருக்கும் அக்ஷய் குமார் தீவிர பாஜக ஆதரவாளர் ஆவார். பிரதமரை நேரடியாக பேட்டி கண்ட பெருமைக்குரியவரும் ஆவார். டிம்பிள் கபாடியா – ராஜேஷ் கண்ணா தம்பதியினரின் மகளான ட்விங்கிள் கண்ணாவை திருமணம் செய்து கொண்ட அக்ஷய் குமார், ரஜினியுடன் 2.0
 

பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் கொரோனா நிவாரண நிதிக்காக பிரதமரின் சிறப்பு நிதிக்கு 25 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். 

இதை ட்விட்டர் மூலம் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளார் அக்‌ஷய் குமார். கனடா நாட்டின் குடிமகனாக இருக்கும் அக்‌ஷய் குமார் தீவிர பாஜக ஆதரவாளர் ஆவார். பிரதமரை நேரடியாக பேட்டி கண்ட பெருமைக்குரியவரும் ஆவார்.

டிம்பிள் கபாடியா – ராஜேஷ் கண்ணா தம்பதியினரின் மகளான ட்விங்கிள் கண்ணாவை திருமணம் செய்து கொண்ட அக்‌ஷய் குமார், ரஜினியுடன் 2.0 படத்தில் வில்லனாகவும் நடித்து இருந்தார்.

தெற்கே பாஜக ஆதரவு நடிகர்களாக அறியப்படும் பவன் கல்யாண், ரஜினிகாந்த், மோகன்லால் கொரோனா நிவாரணத்திற்காக இதுவரை எந்த நிதியுதவியையும் அறிவித்ததாகத் தெரியவில்லை.

கொரோனா தடுப்புக்காக 14 மணி நேரம் மக்கள் ஊரடங்கு அமல் படுத்திய போது, ரஜினிகாந்த், பவன் கல்யாண் இருவரும் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து 14 மணி நேரத்தில் கொரோனோ 3வது கட்டத்திற்கு செல்வதை தடுக்க முடியும் என்ற ஒரே கருத்தை வீடியோ மூலம் வெளியிட்டு இருந்தார்கள். ட்விட்டர் நிறுவனம் இருவருடைய வீடியோக்களையும் நீக்கி விட்டது.

பவன் கல்யாண் அதிகாரப்பூர்வமாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த தனக்கு காவி சாயம் பூசமுடியாது என்று கூறினாலும், பாஜக அரசின் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவித்தே கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்.கடைசியாக டிஸ்கவரி சேனலில் தனது நிகழ்ச்சி பற்றி மார்ச் 23ம் தேதி ட்வீட் செய்திருந்தார். அதன் பின்னர் கொரோனா பற்றியோ 21 நாட்கள் ஊரடங்கு பற்றியோ ரஜினிகாந்த் இது வரையிலும் எந்தக்கருத்தும் கூறவில்லை.

தான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை என்று மோகன்லால் கூறினாலும், அவர் கேரளா ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். பிரதமரின் திட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இவர்கள் மூவரும் விரைவில் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

A1TamilNews.com