சித்து +2 “கண்ணழகி” நந்தினி ரொம்ப பிஸி..

நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு. சித்து +2 வில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ்அறிமுகப்படுத்திய நந்தினி, ராஜா ரங்குஸ்கி படத்தில் வில்லி வேடத்தில் அசத்தி இருந்தார். அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. நந்தினியின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் பாலாஜி சக்திவேல் தனது படத்தில் வாய்ப்பளித்துள்ளார். பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் உருவாகும் அந்தப் படத்தின் பணிகள் முடிவும் தருவாயில் உள்ளது. மென்மையான மனித உணர்வுகளை அழகான திரைப்படமாக்கும் இயக்குனர் ராதா மோகனும் தன்னுடைய படத்தில் நந்தினிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சாந்தினி கதாநாயகியாக நடிக்கிறார். சாந்தினியின் படங்கள் வரிசையில் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு புறம் பாலாஜி சக்திவேல் படம், மறுபுறம் ராதாமோகன் படம் என சாந்தினியின் வரிசையான படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில்
 

டிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும்  நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு.

சித்து +2 வில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ்அறிமுகப்படுத்திய நந்தினி, ராஜா ரங்குஸ்கி படத்தில் வில்லி வேடத்தில் அசத்தி இருந்தார். அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. நந்தினியின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் பாலாஜி சக்திவேல் தனது படத்தில் வாய்ப்பளித்துள்ளார்.

பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் உருவாகும் அந்தப் படத்தின் பணிகள் முடிவும் தருவாயில் உள்ளது. மென்மையான மனித உணர்வுகளை அழகான திரைப்படமாக்கும் இயக்குனர் ராதா மோகனும் தன்னுடைய படத்தில் நந்தினிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.

எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சாந்தினி கதாநாயகியாக நடிக்கிறார். சாந்தினியின் படங்கள்  வரிசையில் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு புறம் பாலாஜி சக்திவேல் படம், மறுபுறம் ராதாமோகன் படம் என சாந்தினியின் வரிசையான படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இரு படங்களும் தனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களாக இருக்கும் என்கிறார் சாந்தினி.

https://www.A1TamilNews.com