நடிகர் விஜய் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை மீரா மிதுன் !! பதிலடி கொடுத்த நடிகை சனம் ஷெட்டி …
இந்நிலையில் இந்த கருத்துக்கு பதிலடியாகவும் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் நடிகை சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வாரிசு சலுகையால் விஜய் திரைத்துறைக்குள் வந்திருந்தாலும் முதல் 5 வருடங்கள் கஷ்டப்பட்ட பிறகு தான் முதல் வெற்றியை அடைய முடிந்தது.
அவரும் தன்னுடை முதல் படத்திலேயே நிறைய விமர்சனங்களை சந்தித்தவர். திறமை, உழைப்பால் தான் இன்று அவர் வெற்றியடைந்து லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
அங்கீகாரம் பெற்ற நடிகரைப் பற்றி பேசுவதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். இத்துடன் இணையத் துன்புறுத்தல்களை நிறுத்திக் கொள்ளவும். இதை செய்வதால் உங்களுக்குப் புகழ் கிடைக்கலாம். இது மாதிரியான செய்திகளை வெளியிட்டதற்காக உங்கள் ட்விட்டர் கணக்கு குறித்து புகார் அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.