விஸ்வரூபம் 2 – விமர்சனம்

நடிகர்கள்: கமல் ஹாஸன், பூஜா குமார், ஆன்ட்ரியா, ராகுல் போஸ் இசை: ஜிப்ரான் தயாரிப்பு: ஆஸ்கார் பிலிம்ஸ் இயக்கம்: கமல் ஹாஸன் மீந்து போன காய்கறிகளை வைத்து ஒரு அவியல் செய்து, அதையும் நேரத்துக்குத் தராமல் புளிக்க வைத்துக் கொடுத்தால் எப்படி இருக்கும்… விஸ்வரூபம் 2 மாதிரிதான் இருக்கும்! ‘தி பர்ஃபெக்ஷனிஸ்ட்’ என்று சொல்லப்படும் கமல்ஹாஸனிடமிருந்து நிச்சயம் இப்படி ஒரு சொதப்பலை எதிர்ப்பார்க்கவில்லை. முதல் பாகம் பெரிதாக வந்துவிட்டதே என்று வெட்டப்பட்ட சில பல காட்சிகளை
 

டிகர்கள்: கமல் ஹாஸன், பூஜா குமார், ஆன்ட்ரியா, ராகுல் போஸ்

இசை: ஜிப்ரான்

தயாரிப்பு: ஆஸ்கார் பிலிம்ஸ்

இயக்கம்:  கமல் ஹாஸன்
 

மீந்து போன காய்கறிகளை வைத்து ஒரு அவியல் செய்து, அதையும் நேரத்துக்குத் தராமல் புளிக்க வைத்துக் கொடுத்தால் எப்படி இருக்கும்… விஸ்வரூபம் 2 மாதிரிதான் இருக்கும்!

‘தி பர்ஃபெக்ஷனிஸ்ட்’ என்று சொல்லப்படும் கமல்ஹாஸனிடமிருந்து நிச்சயம் இப்படி ஒரு சொதப்பலை எதிர்ப்பார்க்கவில்லை.

முதல் பாகம் பெரிதாக வந்துவிட்டதே என்று வெட்டப்பட்ட சில பல காட்சிகளை வைத்து இரண்டாம் பாகம் என்று ஒப்பேற்றியிருப்பதை வேண்டுமானால் பெரிய சாதனையாக சொல்லிக் கொள்ளலாம்.

படத்தின் கதை? இருந்தால் கமல் சொல்லியிருக்க மாட்டாரா?

முதல் பாகத்தில் நியூயார்க்கில் வைக்கப்பட்ட வெடிகுண்டை ப்ரஷர் குக்கரில் வைத்து செயலிழக்கச் செய்யும் கமல், இந்த இரண்டாம் பாகத்தில் இந்தியா மற்றும் லண்டனில் வைக்கப்பட்ட குண்டுகளை செல்போன் எண்களைக் கொண்டு செயலிழக்கை
வைக்க முயற்சிக்கிறார். அவரைக் கொல்ல அல் கொய்தா தீவி்ரவாதி உமர் தேடி வருகிறான். கமல் ஹாஸன் குண்டுகளை செயலிழக்க வைத்தாரா… அல்லது உமர் அவரைக் கொன்றாரா? இதுதான் இரண்டாம் பாகத்தின் கதை!

கமல் ஹாஸன் நல்ல நடிகர்தான்… பல திறமைகளைக் கொண்டவர்தான். அதற்காக எல்லா காலகட்டத்திலும் அத்தனை திறமைகளையும் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல. எப்போதும் க்ளீன் ஷேவ் முகம். அதில் இரு இடங்களில் ப்ளாஸ்டர்கள். படம் முழுக்க, எந்த நாட்டுக்குப் போனாலும் கமல் கெட்டப் இதுதான். இதுவும் அவரது வித்தியாசமான மேக்கப்களில் ஒன்றா தெரியவில்லை!!

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூனை விட அசாத்திய இயக்குநர்கள் உண்டா… ஆனால் அவர்களே சில படங்களில் வெறும் திரைக்கதை எழுதுவதோடு அல்லது இணைத் தயாரிப்பாளர் என்பதோடு நிறுத்திக் கொள்வதுண்டு. அவ்வளவு ஏன்… சில படங்களில் வெறும் ஆலோசகர்களாக இருந்திருக்கிறார்கள். சூழல், வயது என பல
விஷயங்களைக் கவனத்தில் கொண்டு பங்களிப்பைத் தருவதுதான் ஒரு படைப்பாளிக்கு அழகு. கமல் ஹாஸன் இந்தத் தருணத்தில் இதை நினைவில் கொள்வது நலம்.

இது ஆக்ஷன் படம், அதுவும் ஆக்ஷன் த்ரில்லர் என்று அடிக்கடி கூறினார் கமல் ஹாஸன். ஆனால் படம் முழுக்க பேச்சுக் கச்சேரிதான். அதிலும் அம்மா சென்டிமென்ட் என்று நினைத்துக் கொண்டு வைத்துள்ள காட்சிகள்… முடியல!

பூஜா குமார் என்ற முதிர் கன்னியோடு அவர் நடத்தும் காமக் களியாட்டங்களெல்லாம் இந்தப் படத்துக்கு அவசியமா?

பல காட்சிகள் கமல் ஹாஸனின் அலுவலகத்திலேயே எடுக்கப்பட்டு கிராபிக்ஸ் செய்யப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

கமல் ஹாஸனுக்கு, நிலைய வித்வான் மாதிரி ஆகிவிட்டார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இசையும் அந்த லெவலுக்குத்தான் வந்திருக்கிறது, இந்த இன்டர்நேஷனல் ஸ்பை த்ரில்லர் படத்துக்கு! இரண்டு ஒளிப்பதிவாளர்கள். இருந்தும் காட்சிகள் அத்தனை பழசாகத் தெரிகின்றன.

சேகப் கபூரெல்லாம் பக்காவாக வீணடிக்கப்பட்டிருக்கிறார். ஆன்ட்ரியா மட்டும் பரவாயில்லை. ஒரு அசத்தல் சண்டைபோட்டு மனதில் இடம் பிடிக்கிறார். ஆனால் அடுத்த காட்சியிலேயே அவரையும் காலி பண்ணி விடுகிறார்கள்.

சொல்ல கஷ்டமாகத்தான் இருக்கிறது… விஸ்வரூபம் எடுத்து அதலபாதாளத்தில் விழுந்திருக்கிறார் கமல் ஹாஸன்!

Rating: 1.0/5.0

– வணக்கம் இந்தியா