24-05-2019 முதல் 30-05-2019 வரையிலான வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (24-05-2019 முதல் 30-05-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். உடல்நலம் பாதிக்கப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை
 

                                                வார இராசி பலன் (24-05-2019 முதல் 30-05-2019 வரை)

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். உடல்நலம் பாதிக்கப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் கடுமையான முயற்சிகளுக்குப் பின் வெற்றி தரும். தொழில் லாபகரமாக நடைபெறும்.

நன்மை தரும் நாட்கள்: 24, 29, 30

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். மறைமுக எதிரிகளினால் சில பிரச்சினைகள் உண்டாகும். கடன் வாங்கி கடனை திருப்பிச் செலுத்த முடியும்.  வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.  பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். 

உறவினர்களின் வருகை உற்சாகத்தைத் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப் பின் வெற்றி தரும். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 24, 27, 30

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். இடமாற்றத்தில் தடைகள் காணப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். 

பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபத்தைத் தராது. ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டியது வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.  அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்:26, 27, 29

சந்திராஷ்டமம்: 24, 25, 26 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் விருப்பமான இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். சில வழக்குகள் சமாதானமாக முடியும். குடும்பத்தில் பாகப் பிரிவினை உண்டாகும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். 

பயிர்த் தொழில் நல்ல பலன் தரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது.

நன்மை தரும் நாட்கள்: 24, 26

சந்திராஷ்டமம்: 26, 27, 28 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு உண்டாகும். 

எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எழுத்துத் தொழில், எடிட்டிங் பேர் புகழைத் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிட்டும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். 

நன்மை தரும் நாட்கள்:24, 26. 27, 30

சந்திராஷ்டமம்: 28, 29, 30 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகச் சிந்தனை அதிகரிக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்களில் கவனம் தேவை. கல்வியில் சிறு பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்காது. அன்னையின் உடல்நலம் பாதிக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றம் தராது.

நன்மை தரும் நாட்கள்: 25, 27, 30

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். சில கடன்கள் மனக்கவலையைத் தரும்.

பழைய வாகனத்தை விற்று புதுவாகனம் வாங்க முடியும். கல்வியில் சிறிது பின் தங்கிய நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தகவல் தொடர்பு துறையினர் கவனமாக செயல்பட வேண்டும். உழைக்காத பணம் வந்து சேரும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை.

நன்மை தரும் நாட்கள்: 26, 27, 29

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல்நலம் பாதிக்கும். கடன்கள் கவலையைத் தரும். எதிரிகளினால் துன்பம் உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். பணவரவு தாமதமாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது. சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். 

பிரயாணங்கள் நன்மையைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் பலன் தரும்.  கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 24, 25, 29

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக போராட நேரிடும். தன்னம்பிக்கை குறையும். உடல்நலம் பாதிக்கப்படும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபத்தைத் தராது. எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பாகப் பிரிவினை ஏற்படும்.

காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குச் சந்தை ஓரளவுக்கு லாபத்தைத் தரும். உத்தியோகத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. ஒரு சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.  கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கு கடனுதவி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 24, 27, 29, 30

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். பணம், விலை உயர்ந்த பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்பு உண்டு. பிரயாணங்கள் நன்மை தராது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீடு, வாகனத்திற்காக கடன் வாங்க வாய்ப்புண்டு. நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. 

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். பயிர்த் தொழில் நல்ல பலன் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 26, 27, 30

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் வெற்றி கிடைக்க தாமதமாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு கிடைத்தாலும் போதுமானதாக இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நண்பர்கள் பகைவர்களாக மாறுவர். உறவினர்கள் விலகிச் செல்வர். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு செல்வாக்கு உயரும். 

சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 24, 26, 29

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு, செல்வாக்கை காப்பாற்ற அதிக நேரம் உழைக்க நேரிடும். பதவிகள் பறிபோகும். தொழில்கள் பாதிக்கப்படும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். தேவைக்கேற்ப பண வரவு உண்டாகும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் இடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 24, 26, 27

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com