17-05-2019 முதல் 23-05-2019 வரையிலான வார இராசி பலன்கள்
வார இராசி பலன் (17-05-2019 முதல் 23-05-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) இடமாற்றம் உண்டாகும். ஒரு சில வழக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உடல்நலம் பாதிக்கப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளினால்
May 17, 2019, 09:16 IST
வார இராசி பலன் (17-05-2019 முதல் 23-05-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். ஒரு சில வழக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உடல்நலம் பாதிக்கப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா,சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப் பின் வெற்றி தரும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 22, 23
சந்திராஷ்டமம்: 18, 19, 20 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் பிரச்சினையைத் தரும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். காதல் விவகாரத்தில் ஊடல் உண்டாகும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும்.
திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் லாபகரமாக இருக்கும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். உறவினர்கள் விலகிப் போவார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
நன்மை தரும் நாட்கள்: 20, 22
சந்திராஷ்டமம்: 21, 22, 23 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உஷ்ண சம்மந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இடமாற்றம் ஏற்படும். பிரயாணங்கள் செலவினங்களைத் தரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். கணவன் மனைவி இடையே கருத்து வேற்றுமை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
நன்மை தரும் நாட்கள்: 20 , 22, 23
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
பல வகைகளில் பணம் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தராது. குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும்.
வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். நண்பர்களினால் நன்மைகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் தாமதத்திற்கு மேல் வெற்றி தரும். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 20, 22, 23
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
மதிப்பு, செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பல வகைகளில் பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் மாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 20, 22, 23
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. மனக்கவலை அதிகரித்து காணப்படும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
உயர்கல்விக்கான வாய்ப்பு தள்ளிப் போகும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உடல்நலம் பாதிக்கப்படும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது.
நன்மை தரும் நாட்கள்:22, 23
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்காது.
பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். காதல் விவகாரங்கள் கவலையைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நல்ல பலன்களை அனுபவிப்பார்கள். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை.
நன்மை தரும் நாட்கள்: 20, 22
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. மனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல்நலம் பாதிக்கப்படும். கடன்கள் கவலையைத் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வழக்குகளில் வெற்றி கிடைக்காது. உத்தியோகத்தில் பிரச்சினைகள் உண்டாகும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் விரிசல் உண்டாகும்.
திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்காதபடி இருக்கும். புது பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும்.
நன்மை தரும் நாட்கள்: 19, 20, 23
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி கிடைக்க அதிகம் உழைக்க நேரிடும். உடல்நலம் பாதிக்கப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தைத் தரும். பயிர்த் தொழில் பலனளிக்காது. தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பணவரவு எதிர்ப்பார்க்கும் இனங்களிலிருந்து வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
பிரயாணம் நன்மையைத் தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதுத் தொழில்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 19, 20, 23
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபவிரயம் உண்டாகும். உறவினர்கள் பிரிந்து செல்வார்கள். பிரயாணங்கள் நன்மையைத் தராது. நேர்முகத் தேர்வு சாதகமாக இருக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும்.
கல்வியில் முன்னேற்றம் காணப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 20, 22
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். முதலீடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. உறவினர்களிடையே பிரிவு உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.
கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். தகவல் தொடர்புத் துறையில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
நன்மை தரும் நாட்கள்: 19, 22, 23
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
முயற்சிகளில் வெற்றி பெற போராட நேரிடும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். பதவி பறிபோகும். உடல்நலம் பாதிக்கப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகமாக இருக்கும். பணவரவு ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். ஒரு சிலர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவர்.
நன்மை தரும் நாட்கள்:17, 19, 20
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com