மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும் எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும்.
சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. பயிர்த் தொழிலில் நஷ்டம் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 15, 16, 18
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)