மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை. வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். முயற்சிகளில் வெற்றி தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். எடிட்டிங், எழுத்துத்
 

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். முயற்சிகளில் வெற்றி தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது.  நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும்.

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு ஏற்படும். காதல் விவகாரத்தில் மோதல்கள் உண்டாகும். பங்குச் சந்தை நன்மை தராது. குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். சிலருக்கு வேலை கிடைக்கும்.  உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத் தொழிலில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு பதவிகள் பறிபோகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். ஒப்பந்தக்காரர்கள் பிரச்சினையை சந்திக்க நேரிடும்.

நன்மை தரும் நாட்கள்: 15, 16, 19

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com