10-05-2019 முதல் 10-06-2019 வரையிலான வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (10-05-2019 முதல் 16-05-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவசதி தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சிறிது உடல் நலக்குறைவு உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா,
 

வார இராசி பலன் (10-05-2019 முதல் 16-05-2019 வரை)

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
 
பணவசதி தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சிறிது உடல் நலக்குறைவு உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். 
 
சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் கடுமையான முயற்சிக்குப் பின் வெற்றியைக் கொடுக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்:11, 12, 14
 
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
 
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் தள்ளிப் போகும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும்.
 
வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
 
நன்மை தரும் நாட்கள்: 12, 16
 
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
 
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உறவினர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றம் நன்மையைத் தரும். பிரயாணம் லாபகரமாக அமையும்.எதிர்பார்க்கும் தகவல்கள் சாதகமாக வந்து சேரும். 
 
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில், பயிர்த் தொழில் ஆகியவை லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமாக இருக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டாகும். கணவன் மனைவி உறவு சற்று பாதிக்கப்படும்.  அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இரும்.
 
நன்மை தரும் நாட்கள்:12, 14, 16
 
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
 
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் விருப்பமான இடத்திற்கு இடமாற்றம் ஏற்படும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில் லாபகரமாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். 
 
நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் பேர் புகழ் தரும். புதிய பதவிகள் கிடைக்கும்.  தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 14, 15, 16
 
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
 
மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.  குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும்.
 
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.  
 
நன்மை தரும் நாட்கள்: 12, 13, 14
 
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
 
முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. மனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல் நலக்குறைவு ஏற்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். மதிப்பு செல்வாக்கு பாதிக்கப்படும். உத்தியோகத்தில் கெட்ட பெயர் உண்டாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும், 
 
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்விக்கான முயற்சியில் தடைகள் காணப்படும். பிரயாணங்கள் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது.
 
நன்மை தரும் நாட்கள்: 14, 15
 
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
 
திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரயாணங்கள் ஏற்படும். ஆன்மீகத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் தாமதமாகும். 
 
எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்கலாம். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும். 
 
நன்மை தரும் நாட்கள்: 11, 12, 14
 
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)
 
உடல் நலக்குறைவு உண்டாகும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். முயற்சிகளில் தோல்வி ஏற்படும். வழக்குகளில் தோல்வி ஏற்படும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் உண்டாகும். கடன்கள் தொல்லை தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும்.  குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். 
 
காதல் விவகாரங்கள் பிரச்சினைகளைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும்.  சில உழைக்காத பணம் வந்தாலும் கூட தேவைக்கேற்ப இருக்காது.  நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை.  மதிப்பு செல்வாகு உயரும். சில புதிய பதவிகள் தேடி வரும். தொழில் சிறப்பாக நடைபெற்றாலும் கூட போட்டிகள் காணப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்:11, 14
 
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
 
முயற்சிகளில் தடைகள் காணப்படும். உடல்நலம் பாதிக்கப்படும். கல்வியில் தடைகள் ஏற்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில், பயிர்த் தொழில் ஆகியவை நஷ்டத்தில் இயங்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
 
ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஒரு சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். திருமண முயற்சி வெற்றி தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்:13, 14
 
சந்திராஷ்டமம்: 10, 11, 12 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
 
குடும்பத்தில் சுப விரயங்கள் உண்டாகும். உறவினர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இடமாற்றம் தாமதமாகும். பிரயாணங்கள் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில், பயிர்த் தொழில் லாபகரமாக இயங்கும்.  
 
கல்வியில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். குழந்தைகளினால் பெயர், புகழ் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உயர் கல்விக்கான உதவித் தொகை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்:11, 12, 16
 
சந்திராஷ்டமம்: 13, 14, 15 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
 
குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். பணவரவு தாமதமாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் பகைவர்களாக மாறுவார்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். ஒரு சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். தொழில் சுறுசுறுப்பாக இயங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். 
 
உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஆன்மீகப் பிரயாணம் ஏற்படும்.  ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியைத் தரும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். கணவன் மனைவி உறவில் சில விரிசல் உண்டாகும்.
 
நன்மை தரும் நாட்கள்: 11, 13, 14
 
சந்திராஷ்டமம்: 15, 16  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
 
முயற்சிகளில் தடைகள் காணப்படும். சிறிது உடல் நலக் குறைவு உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.  பணவரவு ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.  உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.  அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும்.
 
உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். சில உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். லாட்டரி லாபகரமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 11, 12, 15
 
சந்திராஷ்டமம்: 16, 17, 18 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு :  98846 20941, abalasekar@hotmail.com