22-03-2019 முதல் 28-03-2019 வரையிலான வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (22-03-2019 முதல் 28-03-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இடமாற்றம் தாமதமாகும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதம் நன்மையைத் தராது. காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன்,
 
 
வார இராசி பலன் (22-03-2019 முதல் 28-03-2019 வரை)
 
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
 
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இடமாற்றம் தாமதமாகும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதம்  நன்மையைத் தராது. காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.  அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 22, 23
 
சந்திராஷ்டமம்:  25, 26, 27 –  இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
 
மதிப்பு, செல்வாக்கு உயரும். தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். புது பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் சிறிது குழப்ப நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைக் கொடுக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் கைகூடும். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
 
நன்மை தரும் நாட்கள்: 24, 26
 
சந்திராஷ்டமம்:  27, 28, 29 –  இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
 
முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. மனக் கவலை அதிகரித்து காணப்படும். வீடு, வாகனம் செலவினங்களைக் கொடுக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். கல்வியில் முன்னேற்றம் இருக்காது. உத்தியோகத்தில் இடமாற்றத்துடன் பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் தாமதமாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைந்து காணப்படும். மிகுந்த சிரமத்தின் பேரில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். தகவல் தொடர்பு துறையினர் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். 
 
நன்மை தரும் நாட்கள்: 22, 23, 25
 
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
 
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. தாயாரின் உடல்நலம் பாதிக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றகரமாக நடைபெறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 23, 28, 29
 
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
 
முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல்நலம் பாதுகாக்கப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். பணவரவு தாமதமாகும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை லாபம் தராது. சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 23, 24
 
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)
 
காரியத் தடை காணப்படும். உடல்நலம் பாதிக்கப்படும். தொழிலில் போட்டிகள் காணப்படும். உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகமாகும். பதவி உயர்வு தாமதமாகும். பதவி பறிபோகும். மதிப்பு, அந்தஸ்து பாதிக்கப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். தேவைக்கேற்ப பணம் கிடைக்கும். விபத்துகளுக்கு வாய்ப்பு இருப்பதினால், வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. கல்வியில் தடைகள் காணப்படும். திருமணம் தாமதமாகும். கணவன் மனைவி ஒற்றுமை குறையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் காணும். 
 
நன்மை தரும் நாட்கள்: 22, 25, 27
 
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
 
கேளிக்கைகள் நிறைந்த வாரம். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். குழந்தைகளினால் மதிப்பு உயரும். பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கல்வியில் சிறு தடைகள் காணப்படும். அயல்நாடு சம்மந்தமான விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும்.  
 
நன்மை தரும் நாட்கள்: 22, 23, 25
 
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)
 
மதிப்பு செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபத்தைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட் லாபகரமாக நடைபெறும். திருமணம் கைகூடும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை.
 
நன்மை தரும் நாட்கள்: 22, 23, 25
 
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
 
தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் தொல்லைகள் ஏற்படும். மதிப்பு, கௌரவம் பாதிக்கப்படும். கணவன் மனைவி ஒற்றுமை குறைந்து காணப்படும். திருமணம் தடைபடும். வீடு, வாகனங்கள் செலவினங்களைக் கொடுக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும்.  செலவினங்களை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இடமாற்றம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்:  25, 28
 
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
 
வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பிரயாணங்கள் நன்மை தரும். எதிர்பார்த்த தகவல்கள் வந்து சேரும்.  வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். ரியல் எஸ்டேட் நல்ல லாபத்தைத் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபத்தைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். உயர் கல்வியில் தடைகள் காணப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 22, 23, 26
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
 
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். புது நண்பர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வி வெற்றியைத் தரும். திருமணம் கைகூடும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் கால தாமதம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 22, 23, 24, 25
 
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
 
அயல் நாட்டு விவகாரங்கள் சாதகமான  நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். ஆன்மீகப் பயணம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். திருமணத்தில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த் தொழில் பாதிக்கப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை
 
நன்மை தரும் நாட்கள்: 22, 24
 
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com