15-03-2019 முதல் 21-03-2019 வரையிலான வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (15-03-2019 முதல் 21-03-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) மதிப்பு செல்வாக்கு உயரும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். இடமாற்றம் தாமதமாகும். உத்தியோகத்தில் நல்ல சூழ்நிலை இருக்காது. கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். அயல்நாட்டு சம்மந்தமான விஷயங்கள் தாமதமாகும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தொழில் லாபகரமாக நடைபெறும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
 
   வார இராசி பலன் (15-03-2019 முதல் 21-03-2019 வரை)
 
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
 
மதிப்பு செல்வாக்கு உயரும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். இடமாற்றம் தாமதமாகும். உத்தியோகத்தில் நல்ல சூழ்நிலை இருக்காது. கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். அயல்நாட்டு சம்மந்தமான விஷயங்கள் தாமதமாகும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தொழில் லாபகரமாக நடைபெறும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 17, 20
 
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
 
அயல்நாட்டு விவகாரங்கள் சிறு தடைகளுக்கு மேல் வெற்றியைத் தரும். பண நெருக்கடி உண்டாக வாய்ப்புண்டு. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் நிம்மதியைக் கொடுக்கும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்காது. சினிமா, சங்கீதம் நஷ்டத்தைத் தரும். இன்சுரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. வீடு, வாகனம் வாங்கும் யோசனை நன்மையாக முடியும். 
கல்வியில் முன்னேற்றம் காணப்படும். 
 
நன்மை தரும் நாட்கள்: 15, 16, 21
 
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
 
முயற்சிகளில் தோல்விகள் ஏற்படும். உடல்நலம் பாதிக்கப்படும். கௌரவம் பாதிக்கப்படும். கல்வியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் நிம்மதியைத் தராது. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் லாபகரமாக நடக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும். 
 
நன்மை தரும் நாட்கள்: 16, 19, 21
 
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
 
திருமண முயற்சிகள் கைகூடும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான கடன் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் அடிக்கடி விடுமுறை எடுக்க நேரிடும். 
 
நன்மை தரும் நாட்கள்: 16, 20 21
 
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
 
மன அமைதி குறைந்து காணப்படும். முயற்சிகளில் வெற்றி கிட்டாது. குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். உடல் நலக்குறைவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். காதல் விவகாரங்கள் தோல்வியைத் தரும். பங்குச் சந்தை நஷ்டத்தைக் கொடுக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 15, 20
 
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)
 
உடல்நலம் பாதிக்கப்படும். மனதில் அமைதிக் குறைவு உண்டாகும். தொழில் பாதிக்கப்படும். மதிப்பு செல்வாக்கு சரியும். முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. வேலை கிடைப்பதில் தாமதமாகும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. கடன்கள் கவலையைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை குறைந்து காணப்படும். திருமணத்தில் தடைகள் காணப்படும். 
 
நன்மை தரும் நாட்கள்: 17, 20
 
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
 
பணவசதி தாராளமாக இருக்கும். திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 16, 17, 20, 21
 
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)
 
சிறிது உடல்நலக்குறைவு உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச்சந்தை லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவர். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். 
 
நன்மை தரும் நாட்கள்: 16, 20, 21
 
சந்திராஷ்டமம்:15,16 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
 
இடமாற்றம் உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணத்தில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். அரசியலில் பதவி பறிபோகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 17, 20, 21
 
சந்திராஷ்டமம்:17,18 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
 
வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். இடமாற்றம் நன்மையைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சிலருக்கு குடும்பத்தில் பாகப் பிரிவினை ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. 
 
நன்மை தரும் நாட்கள்: 16, 17, 20
 
சந்திராஷ்டமம்:19,20 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
 
பணவரவு தாராளமாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி  கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் இடமாற்றத்துடன் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். திருமணம் கைகூடும்.
 
நன்மை தரும் நாட்கள்: 16, 17, 20
 
சந்திராஷ்டமம்: 21 – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
 
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். சிலருக்கு அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு உயரும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச்வ்சேர்க்கை உண்டாகும்.
 
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். திருமணத்தில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். வீடு, வாகனம் செலவினங்களைக் கொடுக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 16, 17
 
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com
 
சந்திராஷ்டம்