19-07-2019 முதல் 25-07-2019 வரையிலான வார இராசி பலன்கள்
வார இராசி பலன் (19-07-2019 முதல் 25-07-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.பணவரவு தாராளமாக இருக்கும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் குழப்பங்கள் காணப்படும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். பிரயாணங்கள் நன்மை தராது. காதல் விவகாரங்களில் ஊடல்கள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
நன்மை தரும் நாட்கள்:20, 25
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணங்கள் நன்மை தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே மனக்கவலைகள் உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினைகளைத் தரும். சினிமா சங்கீதம் நன்மை தராது. பங்குச் சந்தை நஷ்டத்தைத் தரும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழிலில் முதலீடு செய்ய நேரிடும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். திருமண ஒப்பந்தங்கள் ஏற்படும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்க தாமதமாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது.
நன்மை தரும் நாட்கள்: 19, 20
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி கிடைக்க அதிகம் உழைக்க நேரிடும். கல்வியில் தடைகள் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. பயிர்த் தொழில் பாதிக்கப்படும். இடமாற்றம் நன்மை தரும். பிரயாணங்கள் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும்.
காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 20, 25
சந்திராஷ்டமம் : 19 இந்த நாளில் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வங்கியில் நிதி நிலை உயரும். இடமாற்றம் தாமதமாகும். பிரயாணங்கள் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் நல்ல பலனைத் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது.
நன்மை தரும் நாட்கள்:19, 25
சந்திராஷ்டமம் : 20, 21 இந்த நாட்களில் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். உடல்நலக் குறைவு ஏற்படும். பணவிரயம் உண்டாகும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். நண்பர்கள் பகைவர்களாக மாறுவர். ஆசைகள் நிராசையாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு தாமதமாகும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் நழுவிச் செல்லும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும்.
ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் நஷ்டம் உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் நஷ்டத்தைத் தரும். பங்குச் சந்தை லாபம் தராது. கடன்கள் தொல்லை தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 19, 24
சந்திராஷ்டமம் : 22, 23, 24 இந்த நாட்களில் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க நேரிடும். முடிவு சுபமாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும்.
வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிரயாணம் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். ரேஸ், லாட்டரி நன்மை தரும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும்.
நன்மை தரும் நாட்கள்: 19, 20, 24
சந்திராஷ்டமம் : 25,26 இந்த நாட்களில் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
மதிப்பு, செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
உத்தியோகத்தில் இடமாற்றம் தாமதமாகும். சில குழப்பங்கள் உண்டாகும். வழக்குகளில் பின்னடைவு உண்டாகும். காதல் விவகாரஙகள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. அயல்நாட்டு விவகாரங்கள் தாமதத்திற்குப் பின் வெற்றி தரும். உயர் கல்விக்கான வாய்ப்பு நழுவி விடும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
நன்மை தரும் நாட்கள்: 19, 20
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர் கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது. சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குச் சந்தை லாபம் ஈட்டாது.
திருமணத்திற்கான ஒப்பந்தம் ஏற்படும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். இன்சூரன்ஸ் பிஎப் பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களிடையே பிரச்சினை உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. மதிப்பு, செல்வாக்கு காப்பாற்றப்படும். தர்ம காரியங்கள் செய்வீர்கள். பயிர்த் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது.
நன்மை தரும் நாட்கள்: 19, 25
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி எளிதாகக் கிடைக்காது. உடல்நலம் பாதிக்கப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். இடமாற்றம் நன்மை தராது. காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும்.
கடன்கள் கவலையைத் தரும். சினிமா சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. உத்தியோகத்தில் வாரக் கடைசியில் குழப்பம் உண்டாகும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். தொழில் மந்தமான நிலையில் இயங்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
நன்மை தரும் நாட்கள்:20, 25
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். இடமாற்றம் தாமதமாகும். பிரயாணங்கள் நன்மை தராது. நேர்முகத் தேர்வின் முடிவு சாதகமாக இருக்காது. வீடு,வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். படிப்புத் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடியும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 19, 20
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகள் நன்மையில் முடியும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தாமதமாகும். உறவினர்கள் உதவி செய்வர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புது நண்பர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.
மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். பிரயாணங்கள் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். காதல் விவகாரங்கள் நன்மை தராது. சினிமா, சங்கீதம் லாபம் தராது. கணவன், மனைவி உறவு பாதிக்கும். திருமணம் தள்ளிப் போகும்.
நன்மை தரும் நாட்கள்: 19, 22, 23
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
முயற்சிகளில் தோல்வி ஏற்படும். மனக்கவலை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவி செய்வர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பிரயாணங்கள் நன்மை தரும்.
ஒரு சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் ஏற்படும்.
நன்மை தரும் நாட்கள்:19, 23, 25
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com