வார இராசி பலன் (8-02-2019 முதல் 14-02-2019 வரை)

8-02-2019 முதல் 14-02-2019 வரையிலான வார இராசி பலன்கள் மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். திருமணம் கைகூடும். பணவசதி தாராளமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு சிரமத்திற்கு மேல் வெற்றியைத் தரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். நன்மை தரும் நாட்கள்: 9, 10, 12, 13 ரிஷபம் (கார்த்திகை
 

8-02-2019 முதல் 14-02-2019 வரையிலான வார இராசி பலன்கள்

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். திருமணம் கைகூடும். பணவசதி தாராளமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு சிரமத்திற்கு மேல் வெற்றியைத் தரும். மதிப்பு, செல்வாக்கு உயரும்.

நன்மை தரும் நாட்கள்: 9, 10, 12, 13

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

முயற்சிகளில் வெற்றி கிடைக்க கால தாமதமாகும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சக ஊழியர்களிடையே மனஸ்தாபம் உண்டாகும். அயல்நாட்டு சம்மந்தமான விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தேவைக்கேற்ப பணவரவு இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 10, 11, 13

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க வாய்ப்பு உண்டாகும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கணவன் மனைவியிடையே மனஸ்தாபம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும்.

நன்மை தரும் நாட்கள்: 8, 10, 12

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடத்திற்கு இடமாற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். அரசியலில் பதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஒரு சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். கணவன் மனைவி ஒற்றுமை குறையும்.

நன்மை தரும் நாட்கள்: 12, 14

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

சிறிது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மறையும். திருமணம் கைகூடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். புது நண்பர்கள் வரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். காதல் விவகாரங்கள் மனக் கவலையைத் தரும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்காது. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

நன்மை தரும் நாட்கள்: 10, 11, 12, 13

சந்திராஷ்டமம்: 8, 9, 10 – இந்த நாட்களில் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)

உடல் நலக்குறைவு உண்டாகும். வரவை மிஞ்சிய செலவு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். திருமண ஒப்பந்தங்கள் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக காணப்படும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும். காதல் விவகாரங்கள் மனக் கவலையைத் தரும். வீடு, வாகனங்கள் செலவினங்களைக் கொடுக்கும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. தகவல்கள் தாமதமாகும்.

நன்மை தரும் நாட்கள்: 8, 10, 12, 14

சந்திராஷ்டமம்: 11, 12 – இந்த நாட்களில் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல்கள் வந்து சேரும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 8, 9

சந்திராஷ்டமம்: 13, 14 – இந்த நாட்களில் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடல் நலக்குறைவு உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். திருமணம் கைகூடும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். முதலீடுகளிலிருந்து வருமானம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 8, 9, 10, 12

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். நல்ல தகவல்கள் வந்து சேரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் சிறிது பின் தங்கிய நிலை காணப்படும். வீடு வாகனங்கள் செலவினங்களைக் கொடுக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களைத் திரும்பச் செலுத்த முடியும். வேலை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாகக் காணப்படும்.

நன்மை தரும் நாட்கள்: 9, 10, 11, 12

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற்று பணம் விரயமாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். இடமாற்றம் நன்மையைத் தரும். பிரயாணங்களினால் நன்மை உண்டாகும். காதல் விவகாரங்கள் மன அமைதியைக் கொடுக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்விக்கான கடன் உதவிகள் கிடைக்கும். நிலபுலன்களின் மூலம் பணவரவு உண்டாகும். இன்சூரன்ஸ், பிஎஃப் பணம் கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். உடல்நலம் பாதிக்கப்படும்.

நன்மை தரும் நாட்கள்: 8, 12

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு பலவகைகளில் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். காதல் விவகாரங்களை ஒதுக்கி வைத்தால் நலம் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 8, 9, 12

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் சாதகமான நிலை காணப்படும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் பங்குதாரர்களிடையே மனக்கசப்பு உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 8, 9, 11

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com