1-02-2019 முதல் 7-02-2019 வரையிலான வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (1-02-2019 முதல் 7-02-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை. வாரக் கடைசியில் வழக்குகளில் வெற்றி கிடைக்கும், உடல்நலமும் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமணம் கைகூடும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும் நன்மை தரும் நாட்கள்: 2, 3, 4 ரிஷபம் (கார்த்திகை 2, 3,
 

வார இராசி பலன் (1-02-2019 முதல் 7-02-2019 வரை)

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
 
உடல்நலத்தில் கவனம் தேவை. வாரக் கடைசியில் வழக்குகளில் வெற்றி கிடைக்கும், உடல்நலமும் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமணம் கைகூடும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும்
 
நன்மை தரும் நாட்கள்: 2, 3, 4
 
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
 
மனம் அமைதியின்றி காணப்படும். உடல்நலம் பாதிக்கப்படும். முயற்சிகளில் தோல்வி ஏற்படும்.  தடைகளுக்கு மேல் திருமணம் நடைபெறும். ஒரு சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். அயல்நாடு சம்மந்தமான விவகாரங்களில் தடைகள் காணப்படும்.  காதல் விவகாரங்கள் ஓரளவுக்கு மன அமைதியைத் தரும்.
 
நன்மை தரும் நாட்கள்: 3, 7
 
சந்திராஷ்டமம்: 1, 2 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் மிகவும் கவனம் தேவை
 
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
 
முயற்சிகளில் தோல்வி காணப்படும்.  வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். வாகனம் ஓட்டும் போது மிகுந்த கவனம் தேவை. தாயின் உடல்நலம் பாதிக்கப்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். திருமணத்தில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் ஓரளவுக்கு சாதகமாக காணப்படும். பங்குச்சந்தை நஷ்டத்தைத் தரும்.  காதல் விவகாரங்கள் மனக்கவலையைத் தரும்.
 
நன்மை தரும் நாட்கள்:2, 7
 
சந்திராஷ்டமம்: 3, 4, 5 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் மிகவும் கவனம் தேவை
 
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
 
வீடு, வாகனம் வாங்க கடன் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.  வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 2, 4, 5
 
சந்திராஷ்டமம்: 7, 8 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் மிகவும் கவனம் தேவை
 
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
 
உடல் நலக் குறைவு உண்டாகும். வழக்குகளில்  வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றத்துடன் பதவி உயர்வு கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். காதல் ஆனந்தத்தைத் தரும்.  பணவரவு தாராளமாக இருக்கும். புது நண்பர்கள் வந்து சேருவார்கள். திருமண வாய்ப்புகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 2, 3, 4, 5
 
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)
 
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்க்கும் சில தகவல்கள் தாமதமாகும். இடமாற்றம் தள்ளிப் போகும். இளைய சகோதரர்களினால் மன அமைதிக் குறைவு ஏற்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. திருமணத் தடைகள் விலகும்
 
நன்மை தரும் நாட்கள்: 2, 4, 6, 7
 
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
 
இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். வழக்குகள் தள்ளிப் போகும். திருமணம் கைகூடும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.  காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி லாபகரமாக நடைபெறும். அயல்நாடு சம்மந்தமான விவகாரங்களில் சாதகமான நிலையில் காணப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 3, 4, 5, 7
 
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)
 
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உடல் நலம் சிறிது பாதிக்கப்படும்.  ஒரு சிலர் புதுத் தொழில் தொடங்குவர். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். பங்குச் சந்தை லாபகரமாக நடைபெறும். லாட்டரி லாபத்தைத் தரும். காதல் விவகாரங்கள் மிகவும் மகிழ்ச்சியைத் தரும். தடைபட்டு நின்ற திருமணம் நடைபெறும்.  பணம் தாராளமாக வரும்.
 
நன்மை தரும் நாட்கள்: 3, 4, 5, 7
 
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
 
ஒரு சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். கல்வியில் பின் தங்கிய நிலை காணப்படும். பணவசதி தாராளமாக இருக்கும். திருமணம் கைகூடும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் மிகவும் சாதகமான நிலையில் காணப்படும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 2, 3, 7
 
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
 
வரவை விட செலவினங்கள் அதிகமாக காணப்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீடு, வாகனம் வாங்க கடன் கிடைக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 2, 5
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
 
மகிழ்ச்சிகரமான வாரம். பணவரவு தாராளமாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். அயல்நாடு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வேலை கிடைக்கும். திருமணம் சிறு தாமதமாகும்.  கூட்டு வியாபாரத்தில் சிறிது மனக்கசப்பு உண்டாகும்
 
நன்மை தரும் நாட்கள்: 2, 4, 5, 7
 
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
 
அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும்.  பாஸ்போர்ட், விசா போன்றவைகள் சாதகமான நிலையில் காணப்படும். மதிப்பு, செல்வாக்கு உயரும். திருமணம் கைகூடும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இன்சூரன்ஸ், பி.எஃப் போன்றவைகள் கிடைக்கும்.  உழைக்காத பணம் கிடைக்க வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 1,3, 5
 
 
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com