வார இராசிபலன்கள் ஆகஸ்ட் 23-29 : கணவன் மனைவி உறவு எப்படி இருக்கும்?

வார இராசி பலன் (23-08-2019 முதல் 29-08-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) மகிழ்ச்சியான வாரம். கடன் பாக்கிகள் தீரும். உழைக்காத பணம் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்கள் ஓடி வந்து
 

                                        வார இராசி பலன் (23-08-2019 முதல் 29-08-2019 வரை)

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

மகிழ்ச்சியான வாரம். கடன் பாக்கிகள் தீரும். உழைக்காத பணம் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்கள் ஓடி வந்து உதவுவார்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சொந்த ஊருக்கு இடமாற்றம் உண்டாகும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை.

நன்மை தரும் நாட்கள்: 23, 27, 29

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் நல்ல பலன் தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. 

நன்மை தரும் நாட்கள்: 23, 26, 29

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

பல வகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். 
விளம்பரத் தொழில், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். 

காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.  சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். கணவன், மனைவி உறவு சிறிது பாதிக்கப்படும். திருமண முயற்சியில் தடைகள் காணப்படும்.  அயல்நாட்டு விவகாரங்கள் அவ்வளவு சாதகமாக இருக்காது. தொழில் சிறப்பாக நடைபெறும்.

நன்மை தரும் நாட்கள்: 24, 25, 27

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சி தரும். வங்கியில் நிதிநிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எழுத்துத் தொழில், எடிட்டிங், தரகர் தொழில், விளம்பரத் தொழில் லாபகரமாக நடைபெறும்.  தொழில் சம்மந்தமான சில முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். 

வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் ஓடி வந்து உதவுவார்கள். ஆசைகள் நிறைவேறும். புதிய பதவிகள் தேடிவரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக நடைபெறும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரஙகள் சாதகமாக இருக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும்.

நன்மை தரும் நாட்கள்: 23, 24, 25

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. குடும்பத்தில் நடைபெற இருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் இடமாற்றம் பதவி உயர்வுடன் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். காதல் விவகாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது.  சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். கணவன், மனைவி உறவு பாதிக்கப் படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். 

நன்மை தரும் நாட்கள்: 23, 25, 26

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு, செல்வாக்கு உயரும். ஆசைகள் நிறைவேறும். புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். பணத்தை முதலீடு செய்ய நேரிடும். செலவினங்கள் அதிகரித்து காணப்படும். உறவினர்களிடையே நல்லிணக்கம் உண்டாகும். 

உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பிரயாணங்கள் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் ஏற்படும். கடன் கவலை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். திருமண ஒப்பந்தங்கள் ஏற்படும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குச் சந்தை பலன் தராது.

நன்மை தரும் நாட்கள்: 24, 26, 29

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பிரயாணங்களில் கவனம் தேவை.

எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்காது. தாயாரின் உடல்நலம் பாதிக்கப் படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு பெயர் புகழ் கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும். வங்கியில் நிதி நிலை உயரும்.

நன்மை தரும் நாட்கள்: 26, 27, 29

சந்திராஷ்டமம்: 23, 24, 25 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

செல்வாக்கு அதிகரிக்கும். பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழில் ஆரம்பிக்க வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி, உறவு சிறப்பாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். 

சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். தொழில் சிறப்பாக நடைபெறும். முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் மறையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்காது.

நன்மை தரும் நாட்கள்: 23, 25, 27

சந்திராஷ்டமம்: 25, 26, 27 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். தொழிலில் மாற்றம் ஏற்படும். பதவி உயர்வு தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறாது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் ஒதுங்கிச் செல்வர். வங்கியில் நிதிநிலை குறையும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். பிரயாணங்கள் நன்மை தராது. காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.

சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.  தொழில் தொடங்க கடன் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். தொழில் மந்தமான நிலையில் இயங்கும்.

நன்மை தரும் நாட்கள்: 23, 26

சந்திராஷ்டமம்: 27, 28, 29 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். உடல்நலம் பாதிக்கப்படும். இடமாற்றம் நன்மை தரும். பிரயாணங்கள் லாபகரமாக அமையும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், விளம்பரத் தொழில், எழுத்துத் தொழில், தரகர் தொழில் ஆகியவை லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். கல்வியில் தடைகள் காணப்படும்.

உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.  ரேஸ், லாட்டரி நஷ்டம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 24, 27, 29

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க நேரிடும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், இடமாற்றமும்  உண்டாகும். பிரயாணங்கள் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், விளம்பரத் தொழில், எழுத்துத் தொழில், தரகர் தொழில் ஆகியவை லாபகரமாக நடைபெறும். சில பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை அதிகமாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நடைபெறும்.  கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 25, 27

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடல் நலக்குறைவு உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 23, 25, 27

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com