ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கடகம்!

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்) குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமு நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் ஓரளவுக்கு நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். பயிர்த் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத்
 

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமு நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் ஓரளவுக்கு நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.

கல்வியில் வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். பயிர்த் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சுமாரான லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்க திட்டம் தீட்டுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதத்தில் முன்னேற்றம் உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். 

ரேஸ், லாட்டரி ஓரளவுக்கு லாபம் தரும். தொழில் தொடங்க திட்டம் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சில பதவிகள் தேடி வரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நன்மை தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 

சந்திராஷ்டமம் : 17, 18, 19 இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

சாதகமான நாட்கள் : 17, 22, 23

ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com