5-04-2019 முதல் 11-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்
வார இராசி பலன் (05-04-2019 முதல் 11-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினைகளைக் கொடுக்கும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
Apr 5, 2019, 15:04 IST
வார இராசி பலன் (05-04-2019 முதல் 11-04-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினைகளைக் கொடுக்கும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 5, 7, 11
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச்சந்தை லாபகரமாக நடைபெறும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் கைகூடும். வெளிநாட்டு விவகாரங்களில் சிறு தடைகள் காணப்பட்டாலும் வெற்றி கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை
நன்மை தரும் நாட்கள்: 5, 8, 9
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். மதிப்பு செல்வாக்கு உயரும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. கடன்கள் கவலையைத் தரும். திருமணம் கைகூடும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக காணப்படும். கூட்டு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 5, 7, 10
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
பிரயாணங்கள் நன்மையைத் தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். இளைய சகோதரர்களினால் மனக்கவலை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். வீடு, வாகனம் செலவீனங்களைக் கொடுக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். கல்வியில் தடைகள் காணப்படும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை குறைந்து காணப்படும். திருமணத்தில் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். நல்ல உத்தியோகம் கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 6, 9, 10, 11
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
மன அமைதி இருக்காது. காரியங்களில் தடைகள் காணப்படும். உடல்நலம் பாதிக்கப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். புது நண்பர்கள் வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். ஒரு சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். ஒரு சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். ஆராய்ச்சிகளில் வெற்றி கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 5, 7, 11
சந்திராஷ்டமம் : 5 இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சிறிது உடல் நலக்குறைவு உண்டாகும். தொழில் தொடங்க கடன் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக காணப்படும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும்.
நன்மை தரும் நாட்கள்: 7, 10
சந்திராஷ்டமம்: 6, 7, 8 இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். தகவல் தொடர்பு துறையினருக்கு இது ஒரு சிறப்பான வாரமாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். கடன் வாங்க வாய்ப்புண்டு.
நன்மை தரும் நாட்கள்: 5, 6, 9
சந்திராஷ்டமம்: 9, 10, 11 இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
பிரயாணங்கள் ஏற்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பணவசதி தாராளமாக இருக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உத்தியோகத்தில் விடுமுறை எடுக்க நேரிடும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
நன்மை தரும் நாட்கள்: 5, 6, 9, 11
சந்திராஷ்டமம்: 11, 12, 13 இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். காதல் விவகாரங்கள் மன அமைதியைக் கெடுக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பங்குச் சந்தை நஷ்டத்தைத் தரும்.
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
பணவரவு தாராளமாக இருந்தாலும் கூட செலவினங்களும் அதிகரித்து காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சிறிது உடல் நலக்குறைவு உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதத்தில் விருதுகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். தகவல் தொடர்பு துறையினருக்கு உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 5, 11
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றமும் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். காதல் விவகாரங்கள் கவலையைத் தரும்.
நன்மை தரும் நாட்கள்: 6, 8, 10
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். வீடு வாகனம் செலவினங்களைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி ஒற்றுமை குறைந்து காணப்படும். சிறிது உடல் நலக்குறைவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
நன்மை தரும் நாட்கள்:5, 6. 11
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com