19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்
வார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். அதனால் சுப விரயம் உண்டாகும். கணவன், மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். நேர்முகத் தேர்வில் தோல்வி ஏற்படும். கேளிக்கைகளில்
Apr 19, 2019, 14:14 IST
வார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். அதனால் சுப விரயம் உண்டாகும். கணவன், மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும்.
நேர்முகத் தேர்வில் தோல்வி ஏற்படும். கேளிக்கைகளில் நாட்டம் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். அயல்நாடு சம்மந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஒரு சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.
நன்மை தரும் நாட்கள்: 19, 22, 25
சந்திராஷ்டமம்: 21, 22, 23 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
ஆசைகள் நிறைவேறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும்.
சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வீடு, வாகனம் செலவினங்களைக் கொடுக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது.
நன்மை தரும் நாட்கள்: 20, 23, 25
சந்திராஷ்டமம்: 24, 25 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
மதிப்பு, செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். புதிய வரவுகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். இடமாற்றம் நன்மையைத் தரும்.
எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபத்தைத் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை காணப்படும். திருமணம் தடைபடும். கணவன் மனைவி ஒற்றுமை குறையும். அயல்நாட்டு சம்மந்தமான விஷயங்கள் சாதகமான நிலையில் இருக்கும்
நன்மை தரும் நாட்கள்: 20, 23, 25
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
பணவசதி தாராளமாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. நேர்முகத் தேர்வில் தோல்வி ஏற்படும். லாட்டரி, ரேஸ்களை தவிர்க்கவும். வீடு, வாகனம் வாங்க வேண்டிய யோகம் உண்டாகும்.
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும்.
நன்மை தரும் நாட்கள்: 19, 23, 25
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். தந்தையின் உடல்நலம் நன்றாக இருக்கும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நண்பர்கள் பகைவர்களாக மாறுவர்.
உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு தாமதமாகும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். ரியல் எஸ்டேட் லாபகரமாக இருக்கும். வீடு, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 19, 20
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)
மனம் தவறான செயல்களைச் செய்யத் தூண்டும். மதிப்பு, செல்வாக்கு குறையும். உத்தியோகத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். பதவி உயர்வு தாமதமாகும். பதவி பறிபோகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பிரயாணங்களைத் தவிர்க்கவும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட் நஷ்டத்தைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும்.
நன்மை தரும் நாட்கள்: 20, 25
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும். கண் பார்வைக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. பிரயாணங்கள் நன்மையைத் தராது. பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். பயிர்த் தொழில் நஷ்டத்தைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். உயர் கல்விக்கான கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும்.
நன்மை தரும் நாட்கள்: 20, 22, 25
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். லாட்டரி, ரேஸ் நஷ்டத்தைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. சினிமா, சங்கீதம் பாதிக்கப்படும். கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் உண்டாகும்.
திருமண முயற்சிகள் சாதகமான நிலையில் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
நன்மை தரும் நாட்கள்: 19, 22, 25
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
உடல் நலக்குறைவு உண்டாகும். முயற்சிகளில் சிரமத்திற்குப் பின் வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். பயிர்த் தொழில் லாபத்தைத் தராது. இடமாற்றம் நன்மையைத் தரும். எடிட்டிங், விளம்பரம், தரகர் ஆகிய தொழில்களில் லாபம் ஈட்டுவர்.
எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குசந்தை லாபகரமாக இருக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். லாட்டரி லாபத்தைத் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். திருமண முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 22, 23, 25
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பணத்தை முதலீடு செய்ய நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. நேர்முகத் தேர்வு சாதகமாக இருக்காது. தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும்.
வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட் லாபகரமாக நடைபெறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். காதல் விவகாரங்கள் தோல்வியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் இருக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
நன்மை தரும் நாட்கள்: 19, 23, 25
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வரவை விட செலவினங்கள் அதிகமாக காணப்படும். நண்பர்கள், உறவினர்கள் பகைவர்களாக மாறுவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பாகப்பிரிவினை உண்டாகும். புதிய பதவிகள் கிடைக்கும்.
தொழிலில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் கூட லாபகரமாகவே நடைபெறும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாகவே இருக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை நஷ்டத்தைத் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.
நன்மை தரும் நாட்கள்: 19, 22, 25
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உடல் நலக்குறைவு உண்டாகும். வியாபாரத்தில் நஷ்டத்தில் இயங்கும். உத்தியோகத்தில் வேளைப்பளு அதிகமாக காணப்படும். பதவி பறிபோகும். மதிப்பு , செல்வாக்கு குறையும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 19, 22, 23
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com