18-01-2019 முதல் 24-01-2019 வரையிலான வார இராசி பலன்கள்
வார இராசி பலன் (18-01-2019 முதல் 24-01-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். சிறிது உடல் நலக்குறைவு உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறிது மனக்கசப்பு ஏற்படும். பணவசதி தாராளமாக இருந்தாலும் கூட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். அயல்நாடு சம்மந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். நன்மை தரும் நாட்கள் : 21, 22, 24 ரிஷபம் (கார்த்திகை 2,
Jan 18, 2019, 22:53 IST
வார இராசி பலன் (18-01-2019 முதல் 24-01-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். சிறிது உடல் நலக்குறைவு உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறிது மனக்கசப்பு ஏற்படும். பணவசதி தாராளமாக இருந்தாலும் கூட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். அயல்நாடு சம்மந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள் : 21, 22, 24
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
வருமானம் அதிகரிக்கும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். லாட்டரி, ரேஸ், பங்குச்சந்தை லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 20, 22, 24
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
மனக்கவலை அதிகரித்து காணப்படும். ஒரு சிலருக்கு ஆப்பரேஷன், விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். குடும்ப வாழ்க்கையில் குழப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி அதிகரிக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள் 18, 19, 20
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
குழந்தைகளினால் நன்மை உண்டாகும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும். சிறிது உடல் நலக்குறைவு உண்டாகும். விசா, பாஸ்போர்ட் போன்றவைகள் சாதகமான நிலையில் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள் : 18, 19, 20, 24
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
உடல் நலக்குறைவு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். செலவினங்கள் அதிகரித்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வீடு, வாகனங்கள் செலவினங்களைக் கொடுக்கும். வழக்குகள் சாதகமான நிலையில் காணப்படும். அயல்நாடு சம்மந்தமான விஷயங்களில் தடைகள் காணப்பட்டு மன அமைதியைக் கெடுக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 22, 24
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)
பணவசதி தாராளமாக இருக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களைத் திரும்பச் செலுத்துவீர்கள். தடைபட்டு நின்ற திருமணம் நடைபெறும்.
நன்மை தரும் நாட்கள்: 18, 19, 20, 22, 24
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
கல்வியில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். வீடு மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். காதல் விவகாரங்கள் பிரச்சனையைத் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 19, 20, 21
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
மகிழ்ச்சியான வாரம். பணவரவு தாராளமாக இருக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடியும். பங்குச்சந்தை, சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்கும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் நல்ல பலன்களைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் ஏற்படும். பழைய வாகனத்தை விற்று புதுவாகனம் வாங்க வேண்டிய நேரமிது.
நன்மை தரும் நாட்கள்: 18, 22, 24
சந்திராஷ்டமம்: 19, 20 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
கல்வியில் பின்தங்கிய நிலை காணப்படும். வீடு, வாகனங்கள் செலவினங்களைக் கொடுக்கும். தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படும். பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். அயல்நாடு சம்மந்தமான விவகாரங்கள் மிகவும் சாதகமான நிலையில் காணப்படும். திருமண முயற்சிகள் சாதகமான நிலையில் இருக்கும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். காதல் விவகாரங்கள் கவலையைத் தரும்.
நன்மை தரும் நாட்கள்: 23, 24
சந்திராஷ்டமம்: 20, 21, 22 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். பண விரயம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. மனக்கவலை அதிகரித்து காணப்படும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு, செல்வாக்கு எந்த காலக் கட்டத்திலும் குறையாது.
நன்மை தரும் நாட்கள்: 18, 20, 22
சந்திராஷ்டமம்: 23, 24 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
பல வகைகளில் பணவரவு உண்டாகும். திருமணம் நடைபெறும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். புதுத் தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டு சம்மந்தமான விஷயங்கள் மிகவும் சாதகமான நிலையில் காணப்படும். காதல் விவகாரங்கள் மனக்கசப்பைக் கொடுக்கும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
நன்மை தரும் நாட்கள்: 18, 19, 20, 21, 24
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
தடைபட்டு நின்றிருந்த திருமணம் நடைபெறும். வீடு, வாகனம் வாங்க வேண்டிய யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வங்கிகளில் கடன் எளிதாக கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். பாஸ்போர்ட், விசா எளிதாக கிடைக்கும். பணவசதி தாராளமாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 19, 20, 21, 22
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com