11-01-2019 முதல் 17-01-2019 வரையிலான வார இராசி பலன்கள்
வார இராசி பலன் (11-01-2019 முதல் 17-01-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) 12ம் இடத்திலிருந்து லக்னாதிபதி வீண் விரயத்தையும், இட மாற்றத்தையும், பிரயாணத்தையும் கொடுக்கும். எட்டாமிடத்தில் இருக்கும் சுக்கிரன் குடும்பத்தில் குழப்பத்தையும், பிரச்சனையும் தரும். உழைக்காத பண வரவுக்கு வாய்ப்புண்டு. ஒரு சிலருக்கு அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கு வாய்ப்புண்டு.தந்தையின் உடல்நலம் பாதிக்கும். பாஸ்போர்ட், விசா போன்றவைகள் தாமதமாகும். நன்மை தரும் நாட்கள்: 13, 14,
Jan 11, 2019, 21:31 IST
வார இராசி பலன் (11-01-2019 முதல் 17-01-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
12ம் இடத்திலிருந்து லக்னாதிபதி வீண் விரயத்தையும், இட மாற்றத்தையும், பிரயாணத்தையும் கொடுக்கும். எட்டாமிடத்தில் இருக்கும் சுக்கிரன் குடும்பத்தில் குழப்பத்தையும், பிரச்சனையும் தரும். உழைக்காத பண வரவுக்கு வாய்ப்புண்டு. ஒரு சிலருக்கு அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கு வாய்ப்புண்டு.தந்தையின் உடல்நலம் பாதிக்கும். பாஸ்போர்ட், விசா போன்றவைகள் தாமதமாகும்.
நன்மை தரும் நாட்கள்: 13, 14, 17
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
திருமணத் தடைகள் விலகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். அயல்நாட்டு பிரயாணம் தடைபடும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் வெகுவாக பாதிக்கப்படும். காதல் விவகாரங்கள் பிரச்சனையைக் கொடுக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 12, 14
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
திருமணம் கூடிவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு உண்டாகும். பாஸ்பார்ட், விசா கிடைக்கும். காதல் விவகாரத்தில் பிரச்சனை உண்டாகும். பங்கு சந்தையில் லாபம் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் மூலம் பணம் கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 11, 14, 16
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
வீடு, வாகனம் வாங்க கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பள் உயர்வு கிடைக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். நிம்மதியை கெடுத்துக் கொண்டிருந்த கடன் தொல்லை அகலும். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து நிம்மதி கெடும். அயல்நாடு சம்மந்தமான விவகாரங்கள் சாதகமாக முடியும்.
நன்மை தரும் நாட்கள்: 11, 16, 17
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் ஏற்படும். சிறிது உடல்நலக் குறைவு உண்டாகும்.பதவியினால் உயர்வு உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உயர்கல்வி, அயல்நாட்டு பிரயாணங்களில் தடை காணப்படும். விசா தாமதமாகும். வாகன்ம் ஓட்டும் போது கவனம் தேவை.
நன்மை தரும் நாட்கள்: 15, 16, 17
சந்திராஷ்டமம்: 12, 13, 14 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)
மனக்கவலை அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அயல்நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வாகனம், வீடு செலவுகளைக் கொடுக்கும். கல்வியில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 12, 14, 16
சந்திராஷ்டமம்: 15, 16, 17 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடைகள், ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பாஸ்போர்ட், விசா போன்றவைகள் சாதகமான நிலையில் இருக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மை பயக்காது. தொழில் முன்னேற்றம் உண்டு. சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 11, 13, 16, 17
சந்திராஷ்டமம்: 17, 18, 19 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
பணவசதி தாராளமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் கனவு பலிக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். திருமணத் தடைகள் விலகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 11, 14, 17
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். வாகனம் செலவினத்தைக் கொடுக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு தொடர்புள்ள காரியங்கள் நன்றாக நடைபெறும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சனையைக் கொடுக்கும். பங்குச்சந்தை நஷ்டத்தைக் கொடுக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் கெடும்.
நன்மை தரும் நாட்கள்: 11, 12, 13, 14
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
குடும்பத்தில் செலவினங்கள் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். குடும்பச் சொத்துக்களை விற்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனங்கள் செலவினங்களைத் தரும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
நன்மை தரும் நாட்கள்: 11, 13, 16
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
பல வகைகளில் பணம் வந்து சேரும். புது நண்பர்கள் கிடைப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அயல் நாட்டுப் பிரயாணம் ஏற்படும். பாஸ்போர்ட், விசா தடையின்றி கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க வாய்ப்புகள் கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 11, 12, 16
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
யோகத்தைக் கொடுக்கும் காலம். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். திருமணத் தடைகள் விலகும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
நன்மை தரும் நாட்கள்: 11, 12, 13, 17
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 9884620941, abalasekar@hotmail.com