சார்வரி வருடத்திய இராசி பலன்கள் – பொதுவான ஜோதிட பலன்கள்!
வருடப்பிறப்பன்று கிரகங்களின் அமைப்பு கீழ்க்கண்டவாறு அமைகிறது.
கேது திசை இருப்பு 0 வருடம் 2 மாதம் 20 நாட்கள்
புத்தாண்டு மூல நட்சத்திரம் தனுசு ராசியிலும் கன்னியா லக்னத்தில் பிறக்கிறது. கேது 4மிடத்தில் குருவினுடைய வீட்டில் இருக்கிறது. குரு சூரியனுடைய சாரத்தில் இருப்பதினாலும், சூரியன் 12க்குரியவனாகி 8மிடத்தில் இருப்பதினாலும், கேது திசை முடியும் வரை நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது.
கேது திசை 3-07-2020 வரை நடைபெறுகிறது. அதன் பின் ஆண்டு முடியும் வரை சுக்கிரதிசை நடைபெறுகிறது. இதில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். இருந்தாலும் சுக்கிரதிசை சுக்கிர திசையில் சூரிய அந்தரம் 22-1-2021 முதல் 24-3-2021 வரை நடைபெறும் காலத்தில் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது.
இனி ஒவ்வொரு இராசிக்கும் புத்தாண்டு என்ன பலன்களை தரும் என்பதை பார்ப்போம்.