சார்வரி வருட பலன்கள்: துலாம் ராசிக்காரர்களுக்கு குழப்பங்கள் இருக்கே! – 50/100
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்கவலை அதிகரித்து காணப்படும். காரியத் தடைகள் ஏற்படும். நம்மால் பிறர் நன்மை அடைவர். சில கடன்கள் தொல்லை தரும். ஓரளவுக்கு பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சினிமா, சங்கீதம் பின்னடைவை சந்திக்கும்.
காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். பங்குச் சந்தை நன்மை தராது. லாட்டரி ரேஸ் நஷ்டம் தரும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். வேலை சம்மந்தமான பிரயாணம் அடிக்கடி ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு.
கேது திசை புதன் புத்தி குரு அந்தரம் 13-4-2020 முதல் 7-5-2020 வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் அதிர்ஷ்டம் தடைபடும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. ஒப்பந்தக்காரர்கள் பிரச்சினையை சந்திக்க நேரிடும்.
கேது திசை புதன் புத்தி சனி அந்தரம் 7-5-2020 முதல் 3-7-2020 வரை நடைபெறும். பயிர்த் தொழில் ஓரளவுக்கு நன்மை தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
சுக்கிரதிசை, சனி புத்தி சுக்கிர அந்தரம் 3-7-2020 முதல் 22-1-2021 வரை நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் மனக்கவலை அதிகரிக்கும். தொழிலில் நஷ்டம் உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பங்கள் உண்டாகும். உடல்நலம் பாதிக்கும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். கடன் தொல்லை தரும்.
சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சூரிய அந்தரம் 22-1-2021 முதல் 24-3-2021 வரை நடைபெறும். இந்த காலக்கட்டம் ஓரளவுக்கு பண வரவைக் கொடுக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சந்திர சுந்தரம் 24-3-2021 முதல் ஆண்டு முடியும் வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டடத்தில் வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மி பூஜையும் துர்க்கா தேவியின் பூஜையும் செய்து வந்தால் வளமான வாழ்வு அமையும்.