சார்வரி வருட பலன்கள்: சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மையே நடக்கும்! – 65/100
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நடக்கவிருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். உறவினர்களும் நண்பர்களும் விலகிச் செல்வர். ஆசைகள் நிராசையாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும்.
புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணம் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பயிர்த் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர்.
குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மோதல் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்கள் தொல்லை தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் பிரிவினை உண்டாகும்.
கேது திசை புதன் புத்தி குரு அந்தரம் 13-4-2020 முதல் 7-5-2020 வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் மனக்கவலை அதிகரித்து காணப்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும்.
கேது திசை புதன் புத்தி சனி அந்தரம் 7-5-2020 முதல் 3-7-2020 வரை நடைபெறும். உடல்நலம் பாதிக்கப்படும். திருமணம் தடைபடும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். கடன்கள் தொல்லை தரும்.
சுக்கிரதிசை, சனி புத்தி சுக்கிர அந்தரம் 3-7-2020 முதல் 22-1-2021 வரை நடைபெறும். இடமாற்றம் உண்டாகும். இந்த காலக்கட்டத்தில் உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும்.
22-1-2021 முதல் 24-3-2021 வரை சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சூரிய அந்தரம் நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.
24-3-2021 முதல் ஆண்டு முடியும் வரை சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சந்திர சுந்தரம் நடைபெறும். இந்தக் காலக்கட்டடத்தில் வீண் விரயங்கள் உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். முதலீடுகள் நன்மை தராது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும்.
பரிகாரம் : சிவபெருமானை வழிபட்டு வர செல்வநிலை உயரும்.