சார்வரி வருட பலன்கள்: மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவு திறக்கும்! – 90/100
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள், கனவுகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். பயிர்த் தொழில் லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும்.
கேது திசை புதன் புத்தி குரு அந்தரம் 13-4-2020 முதல் 7-5-2020 வரை நடைபெறும். உடல்நலம் முன்னேறமடையும். மதிப்பு, செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கேது திசை புதன் புத்தி சனி அந்தரம் 7-5-2020 முதல் 3-7-2020 வரை நடைபெறும். முதலீடுகள் லாபம் தரும். இடமாற்றம் நன்மை தரும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
சுக்கிரதிசை, சனி புத்தி சுக்கிர அந்தரம் 3-7-2020 முதல் 22-1-2021 வரை நடைபெறும். இடமாற்றம் நன்மை தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.
சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சூரிய அந்தரம் 22-1-2021 முதல் 24-3-2021 வரை நடைபெறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும்.
சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சந்திர சுந்தரம் 24-3-2021 முதல் ஆண்டு முடியும் வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். கடன் தொல்லை அகலும்.
பரிகாரம் : திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வர செல்வமும் புகழும் வந்து சேரும்.