சார்வரி வருட பலன்கள்: கும்ப ராசிக்காரர்களுக்கு வீண் விரயங்களுக்கு வாய்ப்பிருக்கு! – 50/100
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
உடல்நலம் பாதிக்கும். இடமாற்றம் உண்டாகும். பணவிரயம் உண்டாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களும், நண்பர்களும் பகைவர்களாக மாறுவர். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடத்திற்கு மாற்றல் உண்டாகும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும்.
பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்கள் தொல்லை தரும். கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமம் உண்டாகும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும்.
கேது திசை புதன் புத்தி குரு அந்தரம் 13-4-2020 முதல் 7-5-2020 வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் பிரயாணமு, இடமாற்றமும் நன்மை தராது. வீண் பண விரயம் உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும்.
கேது திசை புதன் புத்தி சனி அந்தரம் 7-5-2020 முதல் 3-7-2020 வரை நடைபெறும் இந்த காலக்கட்டத்தில் உடல்நலம் பாதிக்கும். பணவிரயம் உண்டாகும். மனம் அமைதியின்றி தவிக்கும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும்.
சுக்கிரதிசை, சனி புத்தி சுக்கிர அந்தரம் 3-7-2020 முதல் 22-1-2021 வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் பணவரவு உண்டாகும். நில புலன்களின் மூலம் நன்மைகள் கிடைக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு ஏற்பட வாய்ப்புண்டு. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடன் கிடைக்கும்.
சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சூரிய அந்தரம் 22-1-2021 முதல் 24-3-2021 வரை நடைபெறும். தடங்கல் ஏற்பட்டு நின்றிருந்த திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். பிரயாணம் ஏற்படும்.
சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சந்திர சுந்தரம் 24-3-2021 முதல் ஆண்டு முடியும் வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். உடல்நலம் பாதிக்கும்.
பரிகாரம் : கால பைரவரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு வர கவலைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.