சார்வரி வருட பலன்கள்: கன்னி ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷடம் அடிக்கும்! – 90/100
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
மதிப்பு செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும், புதிய பதவிகள் தேடிவரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஒப்பந்தக்காரர்கள் லாபம் அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டாகும். முதலீடுகள் நன்மை தராது.
கேது திசை புதன் புத்தி குரு அந்தரம் 13-4-2020 முதல் 7-5-2020 வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் காரியங்களில் தடைகள் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். பயிர்த் தொழில் லாபம் தராது.
கேது திசை புதன் புத்தி சனி அந்தரம் 7-5-2020 முதல் 3-7-2020 வரை நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் சிலருக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கும். உத்தியோகம் கிடைப்பதில் கால தாமதமாகும். சினிமா, சங்கீதம் நன்மை பயக்காது.
சுக்கிரதிசை, சனி புத்தி சுக்கிர அந்தரம் 3-7-2020 முதல் 22-1-2021 வரை நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் நிதிநிலை உயரும். பலவகைகளில் பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும்.
சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சூரிய அந்தரம் 22-1-2021 முதல் 24-3-2021 வரை நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் பணவிரயம் அதிகமாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். முதலீடுகள் நன்மை தராது. மறைமுக எதிரிகளின் தொல்லை உண்டாகும். சில முதலீடுகள் செய்ய நேரிடும்.
சுக்கிரதிசை, சுக்கிர புத்தி சந்திர சுந்தரம் 24-3-2021 முதல் ஆண்டு முடியும் வரை நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். எல்லா செயல்களும் லாபகரமாக முடியும்.
பரிகாரம் : விநாயகப் பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபட நன்மைகள் கோடி வந்து சேரும்.