இராகு கேது பெயர்ச்சி பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கு..
இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி பிப்ரவரி 13ம் தேதி இராகு-கேது பெயர்ச்சி அடைந்து விட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் திருக்கணித படி மார்ச் 9ம் தேதி இராகு-கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. இராகுக்கு கேது எப்போதும் 7மிடத்தில் இருப்பதாலும், ஒரே சமயத்தில் இருவரின் பெயர்ச்சிகளும் நடைபெறுவதினால் பலன் கூறுவதில் குழப்பம் ஏற்படுவது இயற்கையே. மேலும் இராகு, கேது சாமா கிரகங்கள் என அழைக்கப்படுகிறது. இவர்களுக்கு உருவம் கிடையாது. இவர்களுக்கு
Mar 9, 2019, 16:00 IST
இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு
வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி பிப்ரவரி 13ம் தேதி இராகு-கேது பெயர்ச்சி அடைந்து விட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் திருக்கணித படி மார்ச் 9ம் தேதி இராகு-கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. இராகுக்கு கேது எப்போதும் 7மிடத்தில் இருப்பதாலும், ஒரே சமயத்தில் இருவரின் பெயர்ச்சிகளும் நடைபெறுவதினால் பலன் கூறுவதில் குழப்பம் ஏற்படுவது இயற்கையே. மேலும் இராகு, கேது சாமா கிரகங்கள் என அழைக்கப்படுகிறது. இவர்களுக்கு உருவம் கிடையாது. இவர்களுக்கு சொந்த வீடும் கிடையாது. இவர்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ, அந்த வீட்டின் அதிபதியின் பலன்களைத் தருவார்கள். அல்லது எந்த கிரகத்தோடு நெருக்கமாக உள்ளனரோ, அவர்களின் பலன்களைத் தருவார்கள்.
தற்பொழுது கேது மகரத்திலிருந்து தனுசுவுக்கும், இராகு கடகத்திலிருந்து மிதுனத்திற்கும் மாறுகிறது. இராகு கேது பின்னோக்கியே செல்லும். பொதுவாக இராகு புதனுடைய பலன்களையும், கேது குருவினுடைய பலன்களையும் அடுத்த இராகு கேது பெயர்ச்சி வரைக்கும் தரும். ராகு திசை அல்லது ராகு புத்தி, புதன் அல்லது புதன் புத்தி நடைபெறுபவர்கள் ராகுவுடைய பலன்களையும், கேது திசை அல்லது கேது புத்தி, குரு திசை அல்லது குரு புத்தி நடைபெறுபவர்கள் கேதுவுடைய பலன்களையும் பெறுவார்கள். ராகு, கேது பெயர்ச்சியினுடைய பலன்களையும் பின்பற்றுங்கள்.
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
ராகு பலன்கள்
ராகு 9-03-2019 முதல் மூன்றாமிடமாகிய மிதுனத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பாகப்பிரிவினை நடைபெறும். உடல்நலக்குறைவு உண்டாகும். வேலை கிடைக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வம்பு வழக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளதினால் அமைதி காக்க வேண்டும். நிலம் அல்லது வீடு விற்பனை செய்ய வேண்டி வரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். பிரயாணங்களில் கவனம் தேவை
கேது பலன்கள்
கேது 9-03-2019 முதல் ஒன்பதாமிடமாகிய தனுசில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் உண்டாகும்.ஆன்மீகப் பயணம் ஏற்படும். ஒரு சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். வியாபாரத்தில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய வீட்டை இடித்து கட்ட வேண்டியது வரும்.
பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளையும் செவ்வாய்கிழமைகளில் முருகப் பெருமானையும் வழிபட்டு வர நல்லதே நடக்கும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
ராகு பலன்கள்
இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்கும் ராகு, குடும்பத்தில் சில குழப்பங்களை உண்டாக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றகரமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபகரமாக நடைபெறும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் அடிக்கடி விடுமுறை எடுக்க நேரிடும்.
கேது பலன்கள்
எட்டாமிடத்தில் தனுசில் சஞ்சரிக்கத் தொடங்கும் போது மன அமைதியைக் கெடுக்கும். ஆப்பரேசன் அல்லது விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. தேவைக்கேற்ப பணவரவு உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சுரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. பதவி பறிபோகும். முயற்சிகளில் வெற்றி தாமதமாக கிடைக்கும்
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் பராசக்தியை வழிபட்டு வர பிரச்சனைகள் ஓடிப்போகும்.
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
ராகு பலன்கள்
ராகு ஜென்மத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. உடல்நலம் கெடும். அயல்நாட்டில் கல்விக்கான வாய்ப்புகள் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். குழந்தைகளுக்கு அடிக்கடி பயணம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
கேது பலன்கள்
ஏழாமிடத்தில் கேது சஞ்சரிக்கத் தொடங்குகிறது. திருமணம் நடைபெறும். கூட்டுத் தொழில் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும் . உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அரசியலில் செல்வாக்கான பதவி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.
பரிகாரம்: புதன்கிழமை விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
ராகு பலன்கள்
ராகு 12மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். இடமாற்றம் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் ஆகியவற்றை விற்க நேரிடும். நேர்முகத் தேர்வு வெற்றியைத் தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. காசோலை கொடுக்கும் போது கவனம் தேவை. முக்கியமான ஒப்பந்தகளை தள்ளிப் போடுதல் நல்லது.
கேது பலன்கள்
அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர் கல்விக்கான உதவித் தொகை அல்லது கடன் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். உடல் நலக்குறைவு உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வங்கிகளில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
பரிகாரம்: கன்னியாகுமரி சென்று பகவதி அம்மனை வணங்கி வர நன்மைகள் உண்டாகும்.
சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள் நாளை தொடரும்.
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com