‘2019 புத்தாண்டு பலன்கள்’ கணித்தவர்: ஜோதிட விஷாரத். அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)!

2019ம் ஆண்டு சென்னை மத்யஸ்தலத்திற்கு கன்னியாலக்னத்தில் பிறக்கிறது. அன்றைய நட்சத்திரம் விசாகம். லக்னாதிபதி புதன் 3ம் இடத்தில் குருவுடன் சஞ்சரிக்கிறது. எனவே இந்த ஆண்டு போக்குவரத்து துறையும் தகவல் தொழில் நுட்பமும் நன்றாக வளர்ச்சி அடையும். 7ம் இடத்திலிருந்து செவ்வாய் லக்னத்தைப் பார்ப்பதால், நாட்டில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறைவதற்கு வாய்ப்புண்டு. மேலும் நாலாம் இடத்தில் சனி இருப்பதினால் விவசாயம் பாதிக்கப்படும். இயற்கைச் சீற்றத்திற்கும் வாய்ப்புண்டு. ஓரிரு வாகன விபத்துகளும் ஏற்படும். இந்த ஆண்டு மார்ச் 9ம்
 

2019ம் ஆண்டு சென்னை மத்யஸ்தலத்திற்கு கன்னியாலக்னத்தில் பிறக்கிறது. அன்றைய நட்சத்திரம் விசாகம். லக்னாதிபதி புதன் 3ம் இடத்தில் குருவுடன் சஞ்சரிக்கிறது. எனவே இந்த ஆண்டு போக்குவரத்து துறையும் தகவல் தொழில் நுட்பமும் நன்றாக வளர்ச்சி அடையும். 7ம் இடத்திலிருந்து செவ்வாய் லக்னத்தைப் பார்ப்பதால், நாட்டில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறைவதற்கு வாய்ப்புண்டு. மேலும் நாலாம் இடத்தில் சனி இருப்பதினால் விவசாயம் பாதிக்கப்படும். இயற்கைச் சீற்றத்திற்கும் வாய்ப்புண்டு. ஓரிரு வாகன விபத்துகளும் ஏற்படும்.

இந்த ஆண்டு மார்ச் 9ம் தேதி ராகு-கேது பெயர்ச்சியும், நவம்பர் 4ம் தேதி குரு பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. 12 ராசிகளுக்கும் இந்த ஆண்டு நடைபெறும் பொதுப்பலன்களை கீழே பார்க்கலாம்.

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

சனி 9ம் இடத்தில் இருப்பதினால் அயல்நாட்டு உத்தியோகம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக நடைபெறும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு வழக்குகள் சாதகமாக முடியும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும்.

நவம்பர் 4ம் தேதி வரை குரு எட்டாமிடத்தில் சஞ்சரிப்பதால், உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். வாகனங்கள் செலவீனங்களைக் கொடுக்கும். நிலம் சம்மந்தமான வில்லங்கங்கள் ஏற்படும்.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட பிரச்சனைகள் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

ஏழாமிடத்து குரு, தடைபட்டு இருந்த திருமணத்தை நடத்தி வைக்கும். எதிர்பாராத விதத்தில் பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்கும். அஷ்டமத்து சனி தொழிலில் முடக்கத்தைக் கொடுத்தாலும், நவம்பர் 4ம் தேதி குருப் பெயர்ச்சிக்குப் பின் தழைத்து ஓங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக செயல்பட வேண்டும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. மார்ச் 9ம் தேதிக்குப் பின் கேது அஷ்டமத்து சனிக்கு வருவதினால் வம்பு வழக்குகள் ஏற்பட வாய்ப்புண்டு.

பரிகாரம்: அன்னை பராசக்தியை வழிபட்டு வந்தால் அபாயங்கள் குறையும்

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். திருமணத் தடைகள் நவம்பர் 4ம் முதல் நீங்கும். அயல்நாட்டு பிரயாணம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் நேரம் வந்து விட்டது. அதற்கான கடன்கள் எளிதாகக் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைக் கொடுக்கும்

பரிகாரம்: வாயு புத்திரன் அனுமானை அனுதினமும் வணங்கிவர வளமான வாழ்வு கிடைக்கும்.

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

குழந்தைகளால் நன்மை உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். ஒரு சிலர் உத்தியோகத்திலிருந்து ஒய்வு பெறுவர். கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும்.

பரிகாரம்: லலிதா சகஸ்ரநாமம் சௌந்தர்ய லஹரி படித்துவர நல்ல பலன்கள் கிடைக்கும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடியும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கடன் தொல்லைகள் அகலும். வழக்குகள் சாதகமாக இருக்காது. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படும்.

மார்ச் 9ம் தேதிக்குப் பின் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். அதன் பின் பணவரவு தாராளமாக இருக்கும். நினைத்த காரியங்கள் நடைபெறும்.

பரிகாரம்: ஈஸ்வரனை ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட்டு வந்தால் ஈடற்ற நன்மைகள் வந்து சேரும்.

 

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)

கல்வியில் தடைகள் காணப்படும். நிலம், வீடு சம்மந்தமான வில்லங்கங்கள் உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். திருமணம் தாமதமாகும். பயிர்த் தொழில் பலன் தராது. தொழிலில் மந்தமான நிலை காணப்படும். பிரயாணங்கள் நன்மை தராது. உத்தியோகத்தில் பிரச்சனைகள் காணப்படும்.

நவம்பர் 4ம் தேதிக்குப் பின் நல்ல பயன்கள் நடைபெறும்

பரிகாரம்: நாராயணனை நாள்தோறும் வழிபட்டுவர நன்மையான பயன்கள் நடைபெறும்.

மற்ற ராசிகளுக்கான பலன்கள் நாளை தொடரும்.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி (ஜோதிடம்)
தொடர்புக்கு: 98846 20941, abalasekar@hotmail.com