ஒரே நேரத்தில் கணவர், மாமனாருடன் இளம்பெண் திருமணம்.. நடந்தது என்ன தெரியுமா?

 

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெண், தனது திருமணத்தின் போது ஒரு பெரிய சிக்கல் ஒன்றை எதிர்கொண்டதாக ஒரு வினோத சம்பவத்தை விவரித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் காலை நேரத்தில் ‘ஃபிட்ஸி அண்டு விப்பா வித் கேட் ரிச்சி’ என்ற ரேடியா நிகழ்ச்சி அதிகம் பிரபலமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தனது திருமணத்தில் நடந்த குழப்பம் குறித்து கிம் என்ற பெண் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் திருமணம் செய்து கொண்டேன், எங்களுக்கு இரண்டு சாட்சிகள் தேவை என்று சொன்னார்கள். அதன்படி, ஒன்று என் அம்மா மற்றொன்று என் கணவரின் தந்தை. இதுவரை, எல்லாம் அமைக்கப்பட்டு திருமணம் நடைபெற தயாராக இருந்தது; அதுவரை எந்த தவறும் நடக்கவில்லை” என்றார்.

மேலும், எல்லாவற்றையும் கையொப்பமிட்டு இறுதி செய்த பிறகுதான் பிழையை அந்த குடும்பம் பார்த்துள்ளது. “நாங்கள் சான்றிதழை கண்டு அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் அதைப் பார்த்தபோது, ​​நான் இப்போது என் கணவர் மற்றும் என் மாமனாரை திருமணம் செய்துகொண்டேன் என்பதை உணர்ந்தேன்” என்றார் கிம்.

திருமணச் சான்றிதழைப் பார்த்தபோது, மணமகன் கையெழுத்திட்ட அதே இடத்தில், அவரின் மாமனாரும் கையொப்பமிட்டுள்ளார். இதனால், சான்றிதழின்படி அவரது மாமனார் கிம்மின் இன்னொரு கணவரானார். நிகழ்ச்சி அழைப்பாளரின் வினோதமான கதையைக் கேட்ட நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் திணறினர்.

“அப்படியானால் சட்டப்பூர்வமாக ஒரு காகிதத்தில் நீங்கள் உங்கள் மாமனாரை திருமணம் செய்துகொண்டீர்களா?” என கேள்வியெழுப்ப, அதற்கு கிம், “நல்லவேளை அது சான்றிதழ் அளவில் மட்டும் தான். கடவுளுக்கு நன்றி! அவர் சட்டப் பத்திரங்களில் கையெழுத்திடவில்லை, அப்படியாகியிருந்தால் அது பயங்கரமானதாக மாறியிருக்கும்” என பதிலளித்தார்.

இந்த தவறு அதிகாரப்பூர்வமாக கிம்மின் திருமணக் கதையின் துரதிர்ஷ்டவசமான சிறப்பம்சமாக இருந்தாலும், அவர் தனது மாமியாரை சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.