உலகின் மிக வயதான பூனை உயிரிழப்பு.. கதறி அழுத உரிமையாளர்

 

இங்கிலாந்தில் உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட ரோஸி என்ற பூனை இன்று உயிரிழந்தது.

இங்கிலாந்தின் நார்விச் நகரை சேர்ந்த நபர் ஒருவர் ரோஸி என்ற பூனையை வளர்த்து வருகிறார். இந்த பூனை 1991-ல் பிறந்துள்ளது. இந்தாண்டு ஜூன் 1-ம் தேதி இந்த பூனை தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது.

அத்துடன், உலகின் மிக வயதான பூனை என்ற பெருமையோடு வலம் வந்தது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால்  அவரது உரிமையாளரின் வீட்டில் இன்று உயிரிழந்தது.