போட்டோ எடுக்க சென்று குதிரையிடம் கடி வாங்கிய பெண்.. வைரல் வீடியோ!
இங்கிலாந்தில் அரண்மனையில் இருந்த குதிரை முன்பு நின்று புகைப்படம் எடுத்த பெண்ணை கடிக்க முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் வரலாற்று சிறப்புமிக்க பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனையை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அரண்மனையை சுற்றி உள்ள பகுதிகள் முன்பு நின்று அவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள். இதையொட்டி அரண்மனை முன்பு ஏராளமான போலீசார் காவல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் லண்டனின் வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் குதிரை படை காவலர்களின் அணிவகுப்பு நடந்துள்ளது. அப்போது அங்கு சென்றிருந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் குதிரை முன்பு நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அந்த சுற்றுலா பயணி புகைப்படம் எடுப்பதற்காக குதிரையை தொட்டுள்ளார்.
இதனால் ஆவேசம் அடைந்த அந்த குதிரை கிளர்ந்தெழுந்து அந்த பெண்ணை தாக்கி உள்ளது. இதனால் அந்தப்பெண் தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு அங்கிருந்த சிலர் உதவி செய்தனர். அந்த குதிரையில் அமர்ந்திருந்த வீரர் கருமமே கண்ணாயினராக அசையாமல் அமர்ந்திருந்தார். பின்னர் குதிரை படை வீரர் அந்த குதிரையை சாந்தப்படுத்தி உள்ளார்.