கொதிக்கும் கேரமல் தொட்டியில் தவறி விழுந்த பெண்.. சாக்லெட் தொழிற்சாலையில் கோர சம்பவம்!

 

ரஷ்யாவில் உள்ள சாக்லெட் தொழிற்சாலையில் பெரிய கேரமல் தொட்டி ஒன்றில் தவறி விழுந்து ஊழியர் ஒருவர் உயிருடன் சமாதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் நடால்யா நெமெட்ஸ் (36). இவர், பெல்கோரோட் பிராந்தியத்தில் செயல்பட்டு வரும் சாக்லெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர், கேரமல் தொட்டியில் விழுந்து உயிருடன் உடல் வெந்து இறந்தார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்து போன சக ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர்.

கேரமல் தொட்டியை நடால்யா நெமெட்ஸ் சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது, திடீரென்று கொதிக்கும் சாக்லெட் அந்த தொட்டிக்குள் கொட்டப்பட்டுள்ளது. எதிர்பாராத இந்த சம்பவத்தால் நடால்யா நெமெட்ஸ் கத்தவோ உதவிக்கு அழைக்கவோ இல்லை என்றும், இதனால் சக ஊழியர்களுக்கு இந்த விபத்து குறித்து தெரியாமல் போனது என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த பெரிய தொட்டியில் உள்ள மொத்த சாக்லெட்டும் வெளியே கொட்டப்பட்டு, அதன் பின்னர் அவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது நடால்யா நெமெட்ஸ் அவரது இருக்கையில் இல்லை என்பதை சக ஊழியர்கள் உறுதி செய்திருந்தாலும், அவர்கள் கேரமல் தொட்டியில் தவறி விழுந்துள்ளார் என்பதை கண்டுபிடிக்க தவறியுள்ளதாகவே கூறப்படுகிறது.

அந்த கோர சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து யாராலும் விளக்க முடியவில்லை. நடால்யா உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லாமல் போனது என குறிப்பிட்டுள்ளனர். 2017-ல் நடந்த இச்சம்பவத்தில் விசாரணையை முடித்துள்ள அதிகாரிகள், நடால்யா மயக்கமடைந்து கேரமல் தொட்டிக்குள் விழுந்திருக்கலாம் என்றும், அல்லது சுத்தம் செய்யும் போது அவர் தவறி விழுந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.