சிறுவனை மணந்ததாக மோசமாக விமர்சிக்கப்பட்ட பெண்.. உண்மை நிலவரம் என்ன தெரியுமா?
இங்கிலாந்தில் பெண் ஒருவர் தனது திருமணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், அவரை மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.
இங்கிலாந்தை சேர்ந்த 31 வயதான லாரன் இவென்ஸ் என்ற பெண்ணும், ஒரு பையனும் திருமணக் கோலத்தில் நிற்கும் புகைப்படங்களும், அவர் அந்தப் பையனை முத்தமிடும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகின. அதைக் கண்ட இணையவாசிகள், லாரன் சிறுவர்களுடன் தவறாகப் பழகும் பெண் என மோசமாக அவரை விமர்சித்துள்ளார்கள்.
ஆனால், உண்மை என்னவென்றால், அவர் திருமணம் செய்துள்ளது ஒரு பையனை அல்ல! தனது தோழியாகிய ஹன்னா கே (29) என்பவரைத்தான் லாரன் திருமணம் செய்துள்ளார். பார்ப்பதற்கு சின்னப்பையன் மாதிரி இருக்கும் ஹன்னாவுக்கு 29 வயது. நான் இளமையாக தோற்றமளிப்பதற்காக எக்கச்சக்கமாக செலவு செய்துள்ளேன். ஹன்னாவோ இயற்கையாகவே இளமைத்தோற்றத்துடன் இருக்கிறார்.
ஆக, நான் சின்னப்பையன் ஒருவனைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. 29 வயதான என் தோழியைத்தான் திருமணம் செய்திருக்கிறேன். அதுதான் உண்மை. ஆகவே, என்னை யாரும் கைது செய்யமுடியாது, மோசமாக பேசுபவர்கள் பேசட்டும் என்கிறார் லாரன்.