பிரேசிலில் உயிருடன் புதைக்கப்பட்ட பெண்.. 11 நாட்கள் போராட்டம்! பகீர் வீடியோ!

 

பிரேசிரலில் இறந்ததாக கருதி உயிருடன் சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட பெண் ஒருவர், மீண்டுவர பல நாட்கள் போராடி பின்னர் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்கா நாடான பிரேசிலின் பஹியா மாகாணத்தில் உள்ள ரியாச்சாவ் தாஸ் நெவ்ஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரோசங்கலா அல்மேடா டோஸ் சாண்டோஸ். 37 வயதான இந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் சவப்பெட்டி ஒன்றில் வைத்து அடக்கம் செய்துள்ளார்கள்.

ஆனால், ரோசங்கலா அடக்கம் செய்யப்பட்டு 11 நாட்கள் ஆன நிலையில், பெண் ஒருவர் அவரது கல்லறையிலிருந்து அலறல் சத்தமும், சவப்பெட்டியை தட்டும் சத்தமும் கேட்பதைக் கவனித்து, அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து ரோசங்கலாவின் உறவினர்கள் கல்லறையைத் தோண்டுவதென முடிவு செய்துள்ளனர். அதன்படி, கல்லறையைத் தோண்டி சவப்பெட்டியை வெளியே எடுத்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த சவப்பெட்டியைத் திறந்தபோது, ரோசங்கலாவின் உடல் அடக்கம் பண்னப்பட்டபோது இருந்த நிலையிலிருந்து திரும்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கூடவே, அவரது மூக்கு மற்றும் காதில் வைக்கப்பட்டிருந்த பஞ்சும் கீழே கிடந்துள்ளது.

<a href=https://youtube.com/embed/HfqkFZGDiwo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/HfqkFZGDiwo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

ரோசங்கலாவின் உடலும் குளிர்ச்சியாக இல்லாமல் அவரது உடலில் சூடும் இருப்பது தெரியவரவே, உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிருடன் இல்லை என்று கூறியுள்ளார்கள். ஆனால், அவரது கைகளிலும் நெற்றியிலும் இரத்தம் வடிந்துள்ளதும், சவப்பெட்டியின் ஆணி அடிக்கப்பட்ட மூடி மேல் நோக்கித் தள்ளப்பட்டிருப்பதும் தெரிந்துள்ளது.

ஆக, ரோசங்கலா உயிரிழந்ததாக தவறுதலாக முடிவு செய்யப்பட்டு அவர் அடக்கம் பண்ணப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சுயநினைவு வந்ததும், ரோசங்கலா சவப்பெட்டியின் மூடியைக் கையாலும் நெற்றியாலும் முட்டித் திறக்க முயன்றுள்ளார், அதனால்தான் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆக, 11 நாட்களாக ரோசங்கலா சவப்பெட்டிக்குள்ளிருந்து வெளியேற முயன்று கடைசியில் உயிரிழந்தது தெரியவந்துள்ளதால், அவரது உறவினர்கள் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளனர்.