நாம்ம எப்போதும் லவ்பேட்ஸு தான்.. ஸ்கூல் கிரஷ்க்கு 78 வயதில் Propose செய்த தாத்தா!!
அமெரிக்காவில் 78 வயது முதியவர் ஒருவர், 60 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பள்ளிப்பருவ க்ரஷ்ஷிடம் காதலை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் தாமஸ் மெக்மீகின் (78). மருத்துவரான இவர் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளி படிப்பின்போது, தனது வகுப்புத் தோழி நான்சி கேம்பெல் என்பவரை விரும்பியுள்ளார். அதை அவரிடம் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் க்ரஷ்-ஆக தன் மனதிலேயே பத்திரப்படுத்தி தாமஸ் வைத்திருந்திருக்கிறார்.
காலத்தின் கோலத்தால் தாமஸ் ஒருவரையும், நான்சி வேரொருவரையும் மணம் முடிக்க, இவர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு 50ம் ஆண்டு பள்ளி ரீ-யூனியன் நிகழ்ச்சி இணைத்துள்ளது. ஆனால் இருவருக்கும் குடும்பம், உறவுமுறை என தனிப்பட்ட வாழ்க்கை, கடமைகள் இருந்ததால் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை.
இத்தகைய சூழலில் 60ம் ஆண்டு பள்ளி ரீ-யூனியன் நிகழ்ச்சிக்காக நான்சியை தாமஸ் தொடர்பு கொண்டபோதுதான், இருவரும் குடும்பத்தால் தனித்துவிடப்பட்டு இருப்பதை உணர்ந்துள்ளனர். இதன்பிறகு இருவரும் பரஸ்பரம் பேசிப்பழகி நெருக்கமாகி உள்ளனர். இந்த சூழலில், புளோரிடாவின் டம்பா விமான நிலையத்தில் தனது க்ரஷ்-ஆன நான்சியை பெருமகிழ்வுடன் வரவேற்ற தாமஸ், முழங்காலிட்டு ப்ரோபோஸும் செய்துள்ளார்.
A post shared by 𝗠𝗮𝗷𝗶𝗰𝗮𝗹𝗹𝘆 𝗡𝗲𝘄𝘀 (@majicallynews)
என் வாழ்நாள் முழுவதும் காதலிக்க அனுமதிப்பாயா?... என்னைத் திருமணம் செய்துகொள்வாயா? எனத் தாமஸ் கேட்டபோது வெட்கத்தால் சிவந்த நான்சி, அவரை கட்டியணைத்து காதலை ஏற்றுக்கொண்டார்... “We'll always be lovepads”..Grandfather who proposed to Crush.. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயது முதியவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளதை நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துவருகின்றனர்.