இரு தரப்பினர் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி.. அமெரிக்காவில் தொடரும் சோகம்!

 

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அங்கு பல நகரங்களில் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உயிரிழப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அந்நாட்டின் கலிபோர்னியா மாகாணம் கிழக்கு ஹொக்லாந்தின் வெப்ஸ்டர் பகுதியில் இன்று காலை இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

மோதலின்போது துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.