இந்தியாவைச் சேர்ந்த 2 மாணவிகள் கைது.. அமெரிக்காவில் பரபரப்பு

 

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த 2 மாணவிகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹோபோக்கன் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் ஹோபோக்கன் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்தனர்.  அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார்.

இருப்பினும் தவறு செய்திருப்பது நிரூபணம் ஆகி உள்ளதால் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் அங்கிருக்கும் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.