கேள்விகளுக்கு நோ சொன்ன டிரம்ப்.. தேர்தல் பரப்புரையில் நடனம்.. வைரல் வீடியோ

 

அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரைக்கு சென்ற இடத்தில் கேள்விகளை புறந்தள்ளிவிட்டு முன்னாள் அதிபர் டிரம்ப் உற்சாகமாக நடனமாடினார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் (59) போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தற்போது இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை விமர்சித்துள்ள பிரதான போட்டியாளரான தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் , முன்னாள் அதிபர் டிரம்புக்கு மன பிறழ்வு ஏற்பட்டு நிலையாக இல்லை என்று சாடியுள்ளார். தாம் மருத்துவ ரீதியில் முழு உடல் தகுதியுடன் இருக்கும் நிலையில் டிரம்ப் ஏன் தனது மருத்துவ சான்றை வெளியிடவில்லை என்றும் கமலா ஹாரிஸ் கேள்வி எழுப்பினார்