அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி.. கனடாவில் பயங்கரம்!

 

கனடாவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் மனிடொபா மாகாணம் வினிப்பெக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேரை படுகாயங்களுடன் போலீசார் மீட்டனர். இதனை தொடர்ந்து படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரில் ஒருவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய இருவரும் ஆபத்தான ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை, எனினும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் விசாரணை உருவாகும்போது மேலும் விவரங்கள் பகிரப்படும் என்றனர்.