செல்போனை பார்த்தபடி தண்டவாளத்தை கடந்த வாலிபர்.. நொடி பொழுதில் உயிர்தப்பிய சம்பவம்.. வைரல் வீடியோ

 

செல்போனை மும்முரமாக பார்த்தப்படி ரயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்ற வாலிபர் அதிர்ஷ்டவசமாக தப்பிய வீடியோ சமூக வலைளத்தங்களில் வைரலாகி வருகிறது.

நவீன உலகில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பலர் செல்போனுக்கு அடிமையாகி வருகிறார்கள். செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மனித உடலுக்கு பாதிப்புகள் ஏற்படும் என அறிவுறுத்தப்படுகிறது. 

தற்போது இணையத்தில் உலா வரும் வீடியோ, செல்போன் பயன்பாடு உயிருக்கே ஆபத்தாகவும் முடியும் என நிரூபித்துள்ளது. அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் செல்போனை மும்முரமாக பார்த்தப்படி ரயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றார். அப்போது சில அடிகள் தூரத்தில் ரயில் நெருங்கி வந்துவிட்டது. 

உடனே சுதாரித்து கொண்ட அவர் ரயில் மோதுவதை தவிர்க்க ஓடமுயன்று தடுமாறி கீழே விழுந்தார். கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் உயிர் தப்பினார். நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.