பகீர் வீடியோ.. வெடித்து சிதறிய எரிமலை.. ஆறுபோல் ஓடும் லாவா குழம்பு.. ஐஸ்லாந்தில் தீக்கரையான வீடுகள்!!

 

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு காரணமாக எரிமலையில் இருந்து எரிமலைக்குழம்பு வெளியேறி அப்பகுதி மக்களின் வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

வடக்கு ஐரோப்பியாவில் உள்ள தீவு நாடு ஐஸ்லாந்து. இந்த நாடு அண்மையில் பலமுறை எரிமலை வெடிப்புக்குளுக்கு இலக்காகி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தென்மேற்கு ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜேன்ஸில் எரிமலை வெடித்து பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கிராண்டாவிக் பகுதியில் இரண்டு எரிமலைகள் வெடித்துள்ளன. இதன் காரணமாக எரிமலையில் இருந்து எரிமலைக்குழம்பு வெளியேறியது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதே நேரத்தில், குடியிருப்பு பகுதிக்குள் எரிமலைக்குழம்பு பாய்ந்ததால், வீடுகள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

<a href=https://youtube.com/embed/ZOr9ZJ4pJCE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/ZOr9ZJ4pJCE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

அடிக்கடி இது போன்று எரிமலை வெடிப்பு நிகழ்வதால் உரிய பாதுகாப்பு கோரி அந்நாட்டு அரசிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் ஜஸ்லாந்தில் நிகழ்ந்துள்ள 5வது எரிமலை வெடிப்பு சம்பவம் இதுவாகும்.