திடீரென தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட பாதிரியார்.. பொறுத்து பார்த்தும் முடியவில்லை.. பின்னணி என்ன?

 

செக் குடியரசு நாட்டில் பாதிரியார் ஒருவர் திடீரென தனது ஆணுறுப்பை வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செக் குடியரசு நாட்டின் செஸ்கோபுடெஜோவிக் நகரில் மத கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தக் கூட்டத்தில் பாதிரியார் ஒருவர் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. இருப்பினும், அவர் சொன்ன நேரத்தில் வரவில்லை. அந்த பாதிரியாருக்காகக் கொஞ்ச நேரம் காத்திருக்கலாம் என்று காத்திருந்துள்ளனர். இருப்பினும், நேரம் தான் சென்றதோ தவிர அவர் கூட்டத்திற்கு வரவே இல்லை. அந்த பாதிரியார் இதுவரை இப்படி கூட்டத்திற்கு வருவதாகச் சொல்லிவிட்டு வராமல் இருந்ததே இல்லை.

இதனால் சந்தேகமடைந்த மக்கள் இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த பாதிரியார் வீட்டிற்குச் சென்ற போது அங்கே அவர்கள் கண்ட காட்சியை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. அந்த பாதிரியார் சுயநினைவு இல்லாத நிலையில் மீட்கப்பட்டார். அவரே தனது பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். இதனால் அவரது பிறப்புறுப்பு பகுதியில் மிக மோசமான மற்றும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக இது குறித்து மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவர்கள் அந்த பாதிரியார் உடலைப் பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவரது காயங்கள் மிக மோசமாக இருந்தது தெரிய வந்தது. இதனால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந்ததால் மருத்துவர்கள் அவரை மயக்க நிலைக்கு எடுத்துச் சென்றனர். மேலும், அடுத்த 10 நாட்களுக்கு அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நல்ல இருந்த பாதிரியார் ஏன் திடீரென இப்படியொரு முடிவை எடுத்தார் என்பதே அனைவருக்குமான கேள்வியாக இருந்தது. இதற்கான காரணத்தை மருத்துவர்கள் கூறும்போது பலருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சிகரமாகவும் இருந்துள்ளது. அந்த பாதிரியார் சிலந்திப்பேன், அதாவது உண்ணி கடியால் அந்த மோசமான முடிவை எடுத்து இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆங்கிலத்தில் டிக் என்று அழைக்கப்படும் இந்த உன்னி கடிப்பதால் சில நேரம் டிக் மூலம் பரவும் என்செபாலிடிஸ் (TBE) என்ற நோய்ப் பாதிப்பு ஏற்படலாம், இந்த டிக் கடி வெறும் வலியை மட்டும் ஏற்படுத்தாது இது உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தி மனநோய்க்குக் கூட வகுக்குமாம். உரியச் சிகிச்சை பெறாமல் இருந்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம் என்று நமக்கே தெரியாத அளவுக்கு மோசமான நிலை ஏற்படும். இது ஏற்படுத்திய உளவியல் மாற்றங்கள் மற்றும் வலியைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்த பாதிரியார் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது.

அந்த பாதிரியார் உடலைச் சோதனை செய்த போது அவரது உடலில் நரம்பு மண்டலத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிகிறது. இதன் மூலமாகவே அவருக்கு ஏற்பட்டது இந்த டிபிஇ பாதிப்பை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பாதிரியார் மீது வெளியாட்கள் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். டிக் கடித்தால் அந்த எந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.