சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் உல்லாசமாக இருந்த நர்ஸ்.. நிர்வாண கோலத்தில் நோயாளி உயிரிழப்பு!

 

இங்கிலாந்தில் ரகசிய உறவில் இருந்த நோயாளி, காரில் பாலியல் உறவின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் பெனலோப் வில்லியம்ஸ் (42) என்ற பெண் நர்சாக பணியாற்றி வந்தார். இவர் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருடன் ரகசிய உறவை தொடர்ந்து வந்து உள்ளார். அவருடன், மருத்துவமனையின் பின்புறம் கார்கள் நிறுத்தும் இடத்தில் கார் ஒன்றில் பாலியல் உறவு வைத்து உள்ளார்.

இதில், அந்த நோயாளி உயிரிழந்து விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதுகுறித்து போலீசார் வில்லியம்சிடம் விசாரணை நடத்தினர். வில்லியம்ஸ் கூறும்போது, அந்த நோயாளி ஃபேஸ்புக் வழியே உடல்நல பாதிப்பு என செய்தி அனுப்பினார். அதன் பின்னரே அவரை பார்க்க சென்றேன். காரின் பின்புறம் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே செலவிட்டேன். நாங்கள் பேசி கொண்டு இருந்தோம் என முதலில் கூறியுள்ளார்.

தொடர்ந்து விசாரணையில், அந்த நோயாளி திடீரென முனங்க தொடங்கினார். பின்னர் உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளார். போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்பே, அந்த நபருடன் இருந்த உறவு குறித்து அவர் கூறியுள்ளார். அந்த இரவில் அவர் நோயாளியுடன் பாலியல் உறவில் இருந்து உள்ளார். அந்த நபர், உறவின்போது இதயம் செயலிழந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து அதிகாரிகள் சென்றபோது, கீழே ஆடைகள் இன்றி அரை நிர்வாணத்தில் அந்த நபர் கிடந்து உள்ளார். அவரை உடனே ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கொண்டு செல்லவில்லை. அதற்கு பதிலாக சக பணியாளரை அந்த நர்ஸ் அழைத்து உள்ளார்.

அவர் கூறியும் கூட நோயாளியை, ஆம்புலன்சில் கொண்டு செல்லவில்லை. நோயாளியுடன் வில்லியம்சுக்கு உள்ள தொடர்பு பற்றி அறிந்து சக பணியாளர்கள் முன்பே அவரை எச்சரித்து உள்ளனர். ஆனால், அவர் அதனை அலட்சியப்படுத்தி உள்ளார். இந்த நிலையில், நர்ஸ் தொழிலுக்கு எதிராக அதன் கண்ணியம் சீர்குலையும் வகையில் நடந்து கொண்டதற்காக வில்லியம்ஸ் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.