55 ஆண்டுகளாக தன்னைத் தானே வீட்டுக்குள் சிறைவைத்த மனிதர்.. என்ன காரணம் தெரியுமா?

 

உருவாண்டாவில் 71 வயது முதியவர் ஒருவர், பெண்களைக் கண்டு மிகவும் பயப்படுவதாகக் கூறி 55 ஆண்டுகளாக தனது வீட்துக்குள் தன்னைத் தானே சிறை வைத்து வாழ்ந்துள்ளார்.

மத்திய ஆப்பிரிக்க நாடான உருவாண்டாவைச் சேர்ந்தவர் கல்லிட்க்ஸ் நிசம்விட்டே. இவர் தனது 16 வயதில் எந்தவொரு பெண்ணையும் பார்க்க விரும்பாமல், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதோடு வெளி உலகத்திடம் இருந்து தன்னை விலக்கிக்கொள்ள அவர் 15 அடி வேலியை உருவாக்கினார். மேலும் எந்தப் பெண்ணும் வீட்டிற்குள் நுழைய முடியாதபடி அரிப்புப் பலகைகளை வைத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியார்களிடம் ஒரு முறை பேசிய அவர், “நான் இங்கே உள்ளே என்னை தனிமைப்படுத்திக் கொண்டதற்கும் என் வீட்டிற்கு வேலி வைத்திருப்பதற்கும் காரணம், பெண்கள் என்னை நெருங்கி வரக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது தான்.” எதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் தனது இளம் பருவத்தில் தனக்கு பயத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

வெளியில் சென்றால் பார்க்க நேரிடும். அது தனக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தும் என்று எண்ணி 55 ஆண்டுகளாக தனது வீட்டை விட்டு வெளியில் கூட வருவதில்லை. ஆனால் என்னதான் அவர் பெண்களுக்குப் பயந்தாலும், அக்கம் பக்கத்தினர் குறிப்பாக உள்ளூர்ப் பெண்கள் மட்டுமே அவர் 55 ஆண்டுகளாக உயிர் பிழைக்க உதவுகிறார்கள்.

அவரின்  பக்கத்து வீட்டுக்கார பெண்தான் அவருக்கு தேவையான உணவு மற்றும் மளிகைப் பொருட்களைப் வாங்கி வந்து தருகிறார். யாராவது அவருக்கு உதவ முயற்சித்தால், அவர் யாருடனும் பேசுவதற்கு அருகில் செல்ல கூட விரும்பவில்லை. எனவே, அவருக்குத் தேவையானதை அவர் வீட்டிற்குள் வீசுவது தான் வழக்கமாம். அதை ஆட்கள் யாரும் இல்லை என்று இருக்கும்போது வெளியே வந்து எடுத்துக்கொள்வாராம்.

<a href=https://youtube.com/embed/1swLzbjbCX0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/1swLzbjbCX0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

தனது வீட்டின் வழியாக எதாவது பெண் கடந்து சென்றால் கூட உள்ளே ஓடி கதவை பூட்டிக்கொள்வாராம். அந்த முதியவர் பெண்களின் மீதான பகுத்தறிவற்ற பயமான கைனோபோபியா என்ற உளவியல் நோயால் பாதிக்கப்படுகிறார் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதை சோதனை செய்வதற்கான வாய்ப்புகளை கூட அவர் தருவதில்லை. இருப்பினும், மருத்துவ அமைப்பில், இது “குறிப்பிட்ட பயம்” என வகைப்படுத்துகின்றனர்.

கைனோபோபியா அறிகுறிகள் பெண்களின் மீதான பகுத்தறிவற்ற மற்றும் மிகுந்த பயம் மற்றும் அவர்களை நினைத்து கூட தூண்டக்கூடிய பதட்டமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த பயத்தோடு இருக்கும்போது பீதி, மார்பில் இறுக்கம், அதிக வியர்வை, இதயம் வேகமாக துடித்தல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை ஏற்படுமாம்.