மனைவியின் மூளையை தின்ற கணவர்.. கொடூரக் கொலையின் ‘பகீர்’ பின்னணி!

 

மெக்சிகோவில் தனது மனைவியை கொன்று மூளையை உணவில் கலந்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட அமெரிக்கா நாடான மெக்சிகோவின் பியூப்லா நகரில் வசித்து வருபவர் அல்வாரோ (32). இவரது மனைவி மரியா மான்செராட். இவர்களுக்கு 12 முதல் 23 வயதில் ஐந்து மகள்கள் உள்ளனர். அல்வாரோ பேய், பிசாசு குறித்த கருத்தியலில் நம்பிக்கை கொண்டவர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் தன் மனைவி மரியா மான்செராட்டைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, போலீசார் அவரின் வீட்டில் சோதனையிட்டபோது பிளாஸ்டிக் பையில் மனித உடலின் சில துண்டுகள் இருந்திருக்கின்றன. தொடர்ந்து, போலீசார் விசாரித்தபோது பல்வேறு அதிர்ச்சித் தகவலை அல்வாரோ தெரிவித்திருக்கிறார்.

விசாரணையில், “ஜூலை 29-ம் தேதி சாத்தான்தான் இந்தக் குற்றத்தைச் செய்ய உத்தரவிட்டது. அதனால்தான் செய்தேன். என் மனைவியைக் கொலைசெய்து, அவரது முளையை உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டுவிட்டேன். அவரது தலை மண்டை ஓட்டை ஆஷ் ட்ரே ஆக்கி அதில் சிகரெட் சாம்பலை நிரப்ப ஆரம்பித்தான். உடல் பாகங்களை அந்தப் பகுதி பள்ளத்தாக்கில் போட்டிருக்கிறேன்” எனக் கூறினார்.

இது தொடர்பாகப் பேசிய இறந்த பெண்ணின் தயார் மரியா அலிசியா கூறுகையில், “என் மகளின் கணவர் கோகோயின் உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்துக்கொள்வார். அவருக்கு மனநலப் பிரச்னைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். இவர், தனது மகளை கடந்த ஜூன் 29 அன்று கொலை செய்துள்ளார்” எனத் தெரிவித்திருக்கிறார்.