கீழே விழுந்து உயிரிழந்த காதலி.. அறியாமல் காரில் சென்ற காதலன் கைது.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 

இங்கிலாந்தில் தன் காதலி கீழே விழுந்து இறந்ததை அறியாமல் காரில் சென்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.

இங்கிலாந்தின் செரிமோனியல் கவுண்டியின் லீசெஸ்டர்ஷைர் பகுதியைச் சேர்ந்தவர் இயன் கர்சன் (42). இவர் தனது காதலியான கராக் ஈடன் (28) என்பவரை பிரிய முடிவு செய்துள்ளார். இருவரும் சிறிதுகாலம் பிரிந்திருந்த நிலையில், சமீபத்தில்தான் மீண்டும் இணைந்திருந்தனர். ஆனால், கராக் தன் காதலரைப் பிரிந்திருந்த நேரத்தில் வேறொரு ஆணுடன் பழகியுள்ளார்.

அப்போது அவருக்கு கராக் அனுப்பிய குறுஞ்செய்திகள் தொடர்பில் கராக்வுக்கும் ஐயனுக்கும் வாக்குவாதம் ஏற்பட, காதலியை நிரந்தரமாகப் பிரிவதென ஐயன் முடிவு செய்துள்ளார். அவர் தனது காரில் ஏறி புறப்பட, அவரைத் தடுப்பதற்காக கராக் காரைப் பிடித்திருக்கிறார். ஆனாலும் நிற்காத ஐயன், கராக்வின் கையை விலக்கிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுள்ளார்.

சிறிது நேரத்திற்குப் பின், சரி கராக்வுடன் பேசலாம் என அவர் திரும்பி வந்தபோது, காதலி வீட்டின் முன் ஏராளம் போலீசார் நின்றுள்ளனர். இதனைக் கண்ட அதிர்ச்சி அடைந்த ஐயன், காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனைக் கண்ட போலீசார், ஜயன் தான் காதலியை கொலை செய்துவிட்டு தப்பிச் செல்வதாக நினைத்து அவரைக் கைது செய்துள்ளார்கள்.

உயிரிழந்த கராக்வின் தலையில் இரண்டு பெரிய காயங்கள் இருந்ததால், அந்தக் காயங்கள் ஐயன் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் என்ற கோணத்தில் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விசாரணை நடந்துவந்தது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் தானே வாதிட்ட ஐயன், தான் கராக்வின் கையைப் பிடித்து அவரை பாதுகாப்பான தொலைவில் நிறுத்திவிட்டுத்தான் வந்ததாகவும், அவர் கீழே விழுந்ததே தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனக்கு தற்கொலை எண்ணங்கள் உண்டு என்பது கராக்வுக்குத் தெரியும் என்றும், தான் தற்கொலை செய்துகொள்வேனோ என அஞ்சியே அவர் போலீசாரை அழைத்ததாகவும் எண்ணியே கராக் வீட்டுக்குத் திரும்ப வந்த தான், அதனால்தான் போலீசாரைக் கண்டதும் காரை நிறுத்தாமல் திரும்பிச் சென்றதாகவும் ஐயன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவரது வாதத்தை நீதிபதிகளில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டதால், அவர் குற்றவாளி அல்ல என அவர்கள் தீர்ப்பளித்துள்ளனர். ஆகவே, ஐயன் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தன் வீட்டுக்குத் திரும்புவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் நீதிபதிகள் கூறிவிட்டனர்.