பொருளாதார நெருக்கடி.. 8 மாத குழந்தை உட்பட 7 குழந்தைகள், மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்.. பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தானில் மனைவி, 8 மாத குழந்தை உட்பட 7 குழந்தைகளை கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மனைவி மற்றும் 8 மாத கைக்குழந்தை உட்பட 7 குழந்தைகள் கோடாரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குழந்தைகளின் தந்தையான சஜ்ஜத் கோகர் என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொலைகள் தொடர்பான தகவல்களை போலீஸ் தரப்பில் வெளியிட்டபட்டு இருகிறது. அதில், “சஜ்ஜத் கோகர் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு கவுசர் (42) என்ற மனைவியும், எட்டு மாத குழந்தை முதல் 10 வயது வரை இருக்கும் நான்கு மகள்களும், 3 மகன்களும் இருந்தனர்.
இந்த நிலையில், கூலித் தொழிலாளியான சஜ்ஜத்க்கு போதிய வருமானம் இல்லாததால், குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டிருக்கிறது. கடும் வறுமையிலிருந்த சஜ்ஜத் கோகர், கோடாரியால் மனைவி உட்பட 8 குழந்தைகளையும் வெட்டிக் கொலை செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்டவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
கைது செய்யப்பட்ட சஜ்ஜத் பொருளாதார நெருக்கடியால் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.