தீ வைக்கப்பட்ட டெஸ்லா கார்கள்!! எலான் மஸ்க் க்கு எதிர்ப்பு?

 

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பின் வலது கரமாக செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் நிர்வாகத்திறனை மேம்படுத்தும் துறையின் நிர்வாகியாக எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார். ஆயிரக்கணக்கான ஒன்றிய அரசு அலுவலர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இந்நிலையில் லாஸ் வேகஸ் நகரில் உள்ள டெஸ்லா கார் சேவை மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது வன்முறை தாக்குதல் நடந்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. லாஸ்வேகஸ் மெட்ரோபாலிட்டன் காவல் துறை மற்றும் எஃப்.பி.ஐ  அதிகாரிகள் உள்நாட்டு பயங்கரவாத செயலாகக் கருதி விசாரணை நடத்தி வருகின்றனர்